பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.4 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் சிறிதும் பயிற்சியில்லாதவர்களின்பணி இது!சீவில்லிபுத்துார் அருகிலுள்ள திருத்தண் கால்’ என்னும் திருப்பதியை திருத் தங்கால்’ என்று வழங்கி வடமொழியில் தங்கால கூேடித்திரமாக்கித்' தல புராணமும் உண்டாக்கி யிருப்பதுபோல இருக்கும் பூமிபால கூேடித்திர மகான் மியம்’ என்று ஒரு தல புராணமும் தோன்றியிருந்தாலும் அது வியப்பன்று. அடுத்து, அடியார்களின் கோலாகலங்கங்ளைக் கண்டு மகிழவும், அறிவிலிகளான இவ்வுலகத்தவரும் கானத் திருப்புளிங்குடியில் நின்றும் எழுந்து வந்து ஒருநாள் திருப்புளியடியில், சயனத்திருக்கோலத்தைவிட்டு வீற்றி ருத்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என்று வேண்டுகின்றார்' ஆழ்வார். அடுத்த பாசுரத்தில் அதற்கு மேலும் தமக்கிருக்கும் ஆர்வத்தை வெளியிடு கின்றார். "எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணையடி தொழுதெழுந் திறைஞ்சி தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால் தலைத்தலைத் சிறந்துபூ சிப்ப' (கண்முகப்பு - கண்முன்; அன்புஆர பக்தி வளர; தலைத்-தலைசிறந்து- ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து; என்ற அடிகளில் இதனைக் காணலாம். எம்பெருமான் ஆழ்வார் கண்முகப்பே இருக்கும்போது இவ்வுலகத் தாரெல்லாரும் அவனுடைய திருவடியின் சேர்த்தியழகு கண்டு திருவடிகளிலே விழுவதும் எழுவதுமாகி தோத்தி ரங்கள் செய்து வழிபடும் காட்சியையும் தான் கண்டு. களிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார் ஆழ்வார். தங்கள் அன்பு ஆரத் தமது சொல்வலத்தால் பூசிப்பதாவது : நூறு பிராயம் புகுவீர், பொன்னாலே 13. திருவாய் 9, 2:7, 14. திருவாய் 9, 2:8.