பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புளிங்குடிக் காய்சின வேந்தன் ፮8፮ யான அவ்வளவு மிருதுவான திருவடிகளைப் பாவியேனும் பிடிக்குமாறு என்னை அங்கே அழைத்துக் கொள்ளுதல், அன்றி எம்பெருமான் இங்கே வந்தருளுதல் ஒரு நாள் செய்ய வேண்டும்' என்கின்றார் ஆழ்வார். கூவுதல் வருதல் செய்யாயே : இரண்டு செயல்களை விகற்பித்துச் சொல்லும் இடங்களில் பெரியதை முன்னே சொல்லு வதும் சிறியதைப் பின்னே சொல்லுவதும் இயல்பு. எம்பெருமான் வருதல் பெரிய செயல்; ஆழ்வாரைக் கூவிக்கொள்ளல் சிறிய செயல். ஆகவே வருதல் கூவுதல் செய்யாயே’ என்று சொல்லுவதே முறை. அப்படியிருக்க கூவுதல் வருதல் செய்யாயே என்று சொல்லியிருப்பதன் கருத்தை நம் பிள்ளை விளக்கும் நயம்: முற்பட வருதல்’ என்றிலராயிற்று அச்சமுதாயத்தைக்குலைக்க வொண்ணா தென்றும் அத்தாலே’ என்பது. அதாவது, வடிவினையிலா மலர் மகள் மற்றை நில மகள் பிடிக்கும் சந்நிவேசத்தைத் தாமும் கண்டுகளிக்க ஆழ்வார் ஆசைப்பட்டவராகையாலே அந்தச் சேர்த்தி யழகைக் குலைக்க மனமில்லாமை பற்றி வருதலை முன்னே சொல்லிற்றிலர், என்பதை உய்த்துணர்தல் வேண்டும் என்பது. இங்ங்னம் திருப்புளி ஆழ்வார் அடியிலிருந்து கொண்டே திருப்புளிங்குடியானிடம் முறையிட்டு அருபவித்த ஆழ்வாரின் பாரிப்பை நாமும் பெற்றதாகப் பாவனை செய்து கொண்டு திருப்புளிங்குடி எம்பெருமானிடம் நேரில் முறையிடுகின்றோம். இந் நிலையில் திவ்விய கவியின் பாசுரமும் நினைவிற்கு வருகின்றது. தெளியும் பசும்பொன் சிறைக்காற்று வீச வினியும் துயர்போய் விடுமே-எளியேற்கு கருளப் புளிங்குடிவாழ் அச்சுதனைக் கொண்டு கருளப்புள் இங்குவந்தக் கால்.' 15. நூற்.திருப்.அந்-54