பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் (தெளியும்-தெளிந்த, சிறை-இறகுகள்; விளியும் மரண முண்டாகுவது போன்ற; எளியேற்கு-ஏழையேனுக்கு; அருள-திருவருள் புரியுமாறு; கருளம்புள்-பெரிய திருவடி) என்பது பாசுரம். தலைமகனைக் களவொழுக்கத்தாற் கடிப் பிரிந்த தலைமகள் அப்பிரிவுத்துயரை ஆற்றி அடக்கும் வல்லமையற்றவளாய்த் தன் நிலையைத் தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்து அறத்தோடு நிற்கும் செயலைக் கூறுவது இப்பாசுரம். இப்பொழுதே எனது தலைவனாகிய எம்பெருமான் பெரிய திருவடியின் மீது ஏறி ஓடோடி வந்து என்னைச் சார்ந்தால் மாத்திரமே எனது உயிர் நிற்கும்; இல்லாவிடின் இறந்துபடும் என்று தலைவி தன் நிலையைத் தெரிவிக்கின்றாள். அவன் இங்கு எழுந்தருளினால் அவனது முக விலாசத்தைக் கண்டு பிழைக்கலாம் என்பதும், அவன் கண்ணோட்டத்தைப் பெற்று உய்யலாமென்பதும் அவளது உட்கிடக்கை. இப்பாசுரத்தைச் சேவிக்கும்பொழுதே துாதுவிடும் ஆழ்வார் நாயகின் பாசுரம் நினைவிற்கு வருகின்றது.

  • அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்

அருள் ஆழிப் புள்கடவீர் அவர்வீதி ஒருநாள் என்று அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி, அருள், ஆழி வரிவண்டே' |அருளாத-கிருபை பண்ணாத, அவர் ஆவி-ஆழ்வாரின் உயிர்; துவராமுன்-நீர்மை கெடுவதற்கு முன்பு: அருள் ஆழிபுள்-கருணைக் கடலான பெரிய திருவடி, கடவீர்செலுத்துவீர்; இது இந்த வார்த்தை; ஆழி வரிவண்டு. வட்டமான இரேகைகளையுடைய வண்டு.) என்பது பாசுரம். இதனையும் சேவித்து மகிழ்கின்றோம். இங்ங்னம் இறையருபவம் பெற்ற நிலையில் முழு மன நிறைவுடன் திருக்கோயிலை விட்டு வெளி வருகின்றோம். 17. திருவாய் 1. 4 : 6