பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவில்லி மங்கலத் தாமரைக் கண்ணன் 24 f முதன் மூன்று வருணத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்கலாகாது என்பது. பல நியமமாவது, இம்மை மறுமைப் பலன்களில் இன்ன பலத்திற்கு இது சாதனம்; மற்றைய பலன்களுக்கு இது சாதனம் அன்று என்பது. இக்கருத்தினைப் பரத்துவாச சம்ஹிதையும் சனத்குமார சம்ஹிதையும் அரண் செய்கின்றன. பிரபத்திக்கு விஷய நியமமே இன்றியமையாதது.” அதற்கு ஏற்ற இடம் குணபூர்த்தியுள்ள அர்ச்சாவதாரமே என்பதையும் ஆழ்வார்கள் பலவிடங்களிலும் பிரபத்தி பண்ணியது அர்ச்சாவதாரத்திலேயே என்பதையும் சிந்திக்கின்றோம். மனத் தூய்மையுடையவனான வீடணன் வந்ததுவே தேசமும், அவன் வந்ததுவே காலமும் என்று சரணாகதி தருமத்தை அறிந்தவனான சிறிய திருவடி (அநுமன்) அறுதியிட்டபடி இராமபிரான் அவனை ஏற்றுக் கொண்ட தால் தேசகாலநியமம் இல்லை என்பதை அறிகின்றோம். திரெளபதி பூப்பு எய்தியவளாயிருந்தும் சரணாகதி செய்தாள்; கண்ணனும் அதனை ஏற்றுகொண்டான். பார்த்தன் நெடுந்தகையை நினையாதார் நீசர் தாமே” என்றபடி நீசர் நடுவில்தான் இந்நெறியைக் கேட்டான். இவற்றால் பிரகார நியதி தேவை இல்லை என்பதனை அறிகின்றோம். எனவே, பிரபத்தி செய்வதற்குச் சுத்தி அகத்திகள் ஆகிய இரண்டும் தேட வேண்டா என்பது அறியத்தக்கது. அதாவது, பிரபத்தியைச் செய்யத் தொடங்குங்கால் தூய்மையில்லாதவனிடத்தில் தூய்மை யையும், தூய்மையுடையவனிடத்துத் தூய்மையின்மை யையும் தேடவேண்டியதில்லை. வேல் வெட்டிப் பிள்ளை என்ற நம்பிள்ளையின் மாணாக்க ரொருவர் பிரபத்திக்கு நியமம் வேண்டாவோ என்று கேட்டதற்கு நம்பிள்ளை அதற்குத்தந்த விளக்கத்தால் இதனை அறியலாம். இராமன் கடலைச் சரணம் அடைந்தபொழுது 3, நீ வச. பூஷ.-25 4. பெரி. திரு. 11, 6 : 3 பா தி-16