பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24钱 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் களில் அலங்கார நூல் என்ற ஒருவகை உண்டு. அதில் :உயர்வு நவிற்சியணி என்ற ஒர் அணி கூறப்பெற்றுள்ளது. இதனை வடமொழியில் அதிசயோக்தி என்று கூறுவர். சாதாரண கவிஞர்கள் இதனை இவ்வுலக இயல்புகளையும் பிறவற்றையும் கூறுங்கால் கையாளுவர். ஆழ்வார் போன்ற வர்கள் பகவத் விஷயங்களிலும் இதர பிராப்ய விஷயங்களில் மட்டிலுமே பயன்படுத்துவர். இரத்தினங்கள் பதித்த மாடங் கள், மதி மண்டலத்தை எட்டும் உப்பரிக்கைகள், விண்ணை எட்டும் கோபுரங்கள் என்றெல்லாம் அவர்கள் தங்கள் விருப்பத்தினால் அங்ங்னம் சொல்லுகின்றனரேயன்றி இருக்கும் நிலையைக் கூறுகின்றனரல்லர் என்றே கொள்ளல் வேண்டும். ஆசை பற்றி அறையலுற்றேன்" என்று கம்பநாடன் கூறுவதுபோல் அவர்கள் அத் திருத்தலத்தின்மீது கொண்டுள்ள ஆராக் காதலால் அவர்கள் திருக்கண்களுக்கு அங்ங்னம் அது காட்சி தருகின்றதாகவும் கொள்ளலாம். அக்காலத்தில் நான்மறைகளையும் பழுதற ஓதிப் பயன்பெற்ற பார்ப்பனப் பெருமக்கள் இத்தலத்தில் வாழ்ந்து வந்தனர். அதனால்தான் ஆழ்வாரும் நிற். கும் நான்மறை வாணர்வாழ் தொலைவில்லி மங்கலம் 10 என்று குறிப்பிட்டனர் போலும். ஆனால், இன்று அத் தகைய அந்தணோத்தமர்கள் அவ்வூரின் வாழ்வதாகத் தெரியவில்லை. வேதவொலியும் விழா வொலியும்: அவ்வூரில் மிகுந்து காணப்பெறும் என்பதைக் குமிறும் ஒசை விழவொலித் தொலைவில்லி மங்கலம் என்ற தொடர் காட்டுகின்றது. விழாக்கோலம் பூண்டிருக்கும் பொழுது அவ்வூருக்குச் சென்றால் மறையவர் ஒதும் வேதஒலி, பல்வேறு வாத்தியங்களின் ஒலி, காலட்சேபம் செய்வோரின் ஒலி, புராண இதிகாசக் சொற்பெருக்குச் இசய்வோரின் ஒலி, அக்கம் பக்கத்து ஊர் மக்கள் திரண் டிருப்பதால் அவர்கள் பேசும் பேரிரைச்சல் இவையெல்லாம் 10. திருவாய் 6.5:4 11. திருவாய் 6.5:5