பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பாண்டி நாட்டுத் திருப்பதிகள்

நம்மைக் கைவலிந்து. என்ன வார்த்தையும் கேட்கு றாள்தொலை

வில் லி மங்கலம் என்றல் லால் முன்னம் நோற்ற விதிகொ லோ?முகில் வண்ணன் மாயங்கொ லோ அவன் சின்ன மும் திருநாம முமிவள் வாய னகள்தி ருந்தவே '’’’ (கைவலிந்து-கைவிட்டு; மாயம்-சங்கல்பம்; சின் ம்ை அழகு; வாயன-வாயில் உள்ளன.) என்பது பாசுரம். எம்பெருமானின் எழிலும் திருநாமங் களும் ஆழ்வார் நாயகியின் வாயினின்று புறப்படுகை யால் அழகு பெறலாயின என்கின்றாள். பல்வேறு பிறவிகளில் செய்த நல்வினையாலோ அன்றி எம்பெரு மானின் சங்கல்பத்தினாலோ இது நடந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றாள். தம்மையெல்லாம் கைவிட்டு தொலைவில்லி மங்கலம்’ என்ற திருநாமத்தைத் தவிர வேறு ஒன்றையும் செவிமடுப்பதில்லை என்பதையும் கூறுகின்றாள். அன்று தலைவி அத் திருப்பதியைக் கைகூப்பித் தொழுத நாள்தொட்டு 'அரவிந்த லோசன!” என்று அப்பெருமானைப் பலகாலும் வாய் வெருவி நைகின்றாள்' என்பதையும் குறிப்பிடுகின்றாள் தோழி. இங்கே ஈடு: ஒருகால் அரவிந்த லோசன என்னும்போது நடுவே பதின் கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேணும்’ என்பது. இக்குறிப்பினை யும் நினைக்கின்றோம். பின்னும் தோழி கூறுகின்றாள்: இரங்கி நாடொறும் வாய்வெ ரீஇயவள் கண்ண நீர்கள் அலமர, மரங்க ளும்இரங் கும்வ கைமணி வண்ண வோ!' என்று கூவுமால், ہبہ ہبہ مماسیہ--سمہ سمبابہ محم* 23. திருவாய் 6. 5 : ? 24. ഒു. 6, 5 : 6