பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வளர் கொம்புகள் தாமும்' என்று பெரியாழ்வார் சொன்னதெல்லாம் ஆழ்வாரின் ஆர்த்த ஒலியிலும் ஆயிற்று என்பதைச் சொல்ல வேண்டுமா? இறுதியாகத் தோழி வாயால் வெளிப்படும் பாசுரம் : பின்னை கொல்கில மாம கள்கொல்? திரும கள்கொல்? பிறந்திட்டாள் என்ன மாயங்கொ லோ? இவள்கெடு மாலென்றே கின்று கூவுமால் முன்னி வந்தவன் கின்றி ருத்துறை யும்தொலைவில்லி மங்கலம் சென்னி யால்வணங் கும்.அவ் ஆர்த்திரு காமம் கேட்பது சிங்தையே.' (சென்னி-தலை; சிந்தை-சிந்தனை.) பராங்குச நாயகியின் காதல் மிகுதியை நோக்கினால் தோற்றும் நிலையைக் கூறுகின்றாள். ஆழ்வார் நாயகி கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபட்டிருக்கும் தன்மையை நோக்குங்கால் சாட்சாத் பின்னைப் பிராட்டிதானோ இவள்?’ என்று சொல்லவேண்டும். இவள் வராகப் பெருமான் திறத்தில் ஈடுபட்டிருக்கும் தன்மையை நோக்குமளவில் இவள் சாட்சாத் பூமிப் பிராட்டிதானோ?” என்ற ஐயம் தோன்றும். இவளுடைய இராமாவதார ஈடுபாட்டை நோக்கினால் சாட்சாத் சீதாப் பிராட்டி தானோ இவள்?’ என்ற சங்கைதோன்றும் என்கின்றாள். இப்பாசுரத்தில் பிறந்திட்டாள்’ என்பதைப் பின்னை பிறந்திட்டாள் கொல்? நிலமாமகள் பிறந்திட்டாள் கொல்? திருமகள் பிறந்திட்டாள் கொல்? என்று பொருள் காண்ப தோடன்றி வேறு விதமாகவும் யோசிக்கலாம். அஃதாவது இவள் பின்னை கொல்? இவள் நிலமாமகள் கொல்? இவள் திருமகள் கொல் (அன்றியே) பிறந்திட்டாள் கொல்? என்பதாக. இங்கே ஈடடு சூக்தி காண்மின்: அவர்களுக்கு بمبیبیسیبیسیم به بمبهمییابع 27. பெரியாழ் திரு. 3. 6 : 10 28. திருவாய் 6, 5:10