பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宠语墨 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் தந்தை தாயென் றடைந்த வண்குரு கூரவர்சட கோபன்சொல் முந்தை யரயிரத்துள்.' என்பது ஆழ்வார் திருவாக்கு. ஆகையால் இத்திவ்விய தேசத்தில் இறைவனுடைய பாக்தவ குணம்’ விளங்கு கின்றது என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் கருத்தாகும் முந்தையாயிரம்' என்பது அநாதியான ஆயிரம். ஆழ்வார் திருவாக்கினின்றும் அவதரித்ததான இத் திவ்வியப் பிரபந்தம் அநாதியான தென்று எங்கனம் சொல்ல கூடுமென்று சிலர் ஐயுறலாம் இதனை ஆசாரிய ஹிருதயமே விரிவாகச் சமாதானம் கூறுகின்றது. அநாதியான வேதத்தை எங்ங்னம் நான்முகன் அருளினான் என்று சொல்லப்பெறுகின்றதோ அங்ங்னமே அநாதியான திருவாய்மொழியும் ஆழ்வார் அருளினார் என்று சொல்லப் பெறுவதற்குத் தட்டில்லை'. இங்கனம் எண்ணிய வண்ணம் திருக்கோயிலை விட்டு வெளிவருங்கால் ஆசாரிய ஹிருதயத்தின் சூத்திரம் நம் நினைவிற்கு வருகின்றது. கடித கடக விகடகா பாந்த வம், அவ்வூரிலே துவிகுணம்.” |கடிதர்-சேர்க்கப்பெறுபவர்கள், கடகர்-சேர்ப்பவர்கள்; விகடநாபாந்தவம்-பொருந்தாமையைச் செய்கின்ற உறவு முறை, விகடநை-பொருந்தாமை; அவ்வூர்-தொலைவில்லி மங்கலம்; துவி-இரண்டு , என்பது சூத்திரம். இங்குக் கடிதர் என்றது, ஆழ்வாரை. கடகர் என்றது தோழிமாரை. இவர்களுக்குள் பரஸ்பரம் பொருந்தாமையை விளைத் திட்டது அப்பகவானது உறவு. பட்டர் அழகிய மணவாளப் பெருமாள்' என்றும், சோமாசியாண்டான் ‘எம்பெருமானார்: என்றும், T30. திருவாய் 6, 5 : 11 81. ஆசா ஹிரு சூ-46 32. ஆசா ஹிரு.168