பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவில்லி மங்கலத் தாமரைக் கண்ணன் 爱莎莎 அனந்தாழ்வான் திருவேங்கடமுடையான்’ என்றும் ஆழ்வார் நாயகி தொலைவில்லி மங்கலம்’ என்றும் சொல்லும்போது உண்டாகும் இனிமை தோழி சொல்லும் போது உண்டாகாமையாலே அவள் அவ்வூர்' என் கின்றாள். சூத்திரம் குறிப்பிடுவதும் இக்கருத்தேயாகும். இந்நிலையில் திவ்விய கவியின் பாசுரம் நினைவிற்கு வர, அதனையும் மிடற்றொலியால் சேவிக்கின்றோம். வாயு மனைவியர்பூ மங்கையர்கள் எம்பிராற் கு) ஆயுதங்கள் ஆழிமுதல் ஐம்படைகள்-து:ய தொலைவில்லி மங்கலமூர் தோள்புருவ மேனி மலைவில்லி மங்கலந்த surgir * 334 (வாயு-பொருந்திய, பூ மங்கையர்கள்.சீதேவியும் பூ தேவியும்; ஆழி-சக்கரம், ஊர்-திவ்விய தலம்; இமம்கலந்த -குளிர்ச்சி பொருந்திய ) என்பது பாசுரம். இதில் எம்பெருமானின் தேவியர் இன்னார் என்பதும், அவருடைய ஆயுதங்கள் இன்னவை, அவருடைய திருத்தோள், திருப்புருவம், திருமேனி இவற்றிற்கு முறையே மலை வில் குளிர்ச்சி பொருந்திய ஆகாயம் உவமையாகும் என்பதும் காட்டப் பெற்றன. திருக்கோயிலின் வெளியில் ஒர் அமைதியான இடத்தில் அமர்ந்து இத்திருவாய்மொழி முழுவதையும் ஓதி உளங் கரைகின்றோம். இந்தப் பத்துப் பாசுரங்களையும் ஒதிய பிறகு ஒதியதன் பலனையும் சிந்திக்கின்றோம் செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே’’ என்ற அடியைச் சிந்தித்தவண்ணம் நெல்லையில் நாம் தங்கி யிருக்கும் விடுதிக்குத் திரும்புகின்றோம். 33. திருவாய் 6. 5 : 9, 10 34. நூற். திருப். அந்-50 95. திருவாய் 6, 5 : 11