பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. வானமாமலைத் தோத்தாத்திரிநாதன் பாரதப் போரில் போர்க்களத்தில் அர்ச்சுனன் தன் உறவினர்களும் ஆசிரியர்களும் தனக்குப் பகையாய் எதிர்ப் பக்கத்தில் நிற்பதைக் காண்கின்றான். அவர்களுடன் போரிட்டால் அவர்கள் இறப்பது உறுதியென்பதையும் சிந்திக்கின்றான். அதனால் வரும் பாபத்திற்கு அஞ்சி நிலை குலைகின்றான். படையெடேன்' என்று வாக்குத் தந்தே மாயப் போர்த் தேர்ப்பாகனாரிடம் சரணம் புகுந்து தனக்குச் சரியான வழியைக் காட்டுமாறு வேண்டு கின்றான். பார்த்தசாரதியும் அவன்மீது கருணை கொண்டு கீதையின் வாயிலாக ஆன்மாவின் இயல்பினையும் கர்மயோக ஞான யோகங்களையும் வீடு பெற நேரக்காரண மான பக்தியோகத்தையும் அவ்வவற்றின் அங்கங்களுடன் (விரிவுகளுடன்) உபதேசிக்கின்றான். அவற்றைச் செவி மடுத்த பார்த்தன் பக்தி யோகம் அநுட்டிப்பதற்குக் கடின மாயும் பலன் தருவதற்கு நீண்டகாலமாவதையும் இருப் பதைக் கண்டு மனம் கலங்குகின்றான். இதைக் கண்ட கண்ணனும் அநுட்டிப்பதற்கு எளிதாகவும் விரைவில் பலன் தரக் கூடியதுமான பிரபத்தி நெறியை உபதேசித்துக் கீதையையும் தலைக் கட்டுகின்றான். பிரபத்தி வழியைக் 1. பிரபத்தி-பிர-சிறப்பு: பது-செல்லல், அடைதல்; பிரபத்தி-சிறப்பாக அடைதல்; சிறப்பாவது-மனத்தால் அடைதல்; இது சரணடைதல் எனப் பொருள்படும்.