பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானமாமலைத் தோத்தாத் திரிநாதன் 25? கூறும் ரீ ஸ்லக்தியே 'சரம சுலோகம் எனப் பெயர் பெற்று விளங்குகின்றது. வைணவ மறைகளாக விளங்கும் திருமந்திரம், துவையும், சரமகலோகம் என்பவற்றில் மூன்றாவதாகத் திகழ்கின்றது. இந்தப் பிரபத்தி நெறியை வெறும் உபாயமாகக் கொண்டால் நேரும் குற்றத்தையும் வைணவ ஆசாரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சாத்தியோபாயமான' பிரயத்தியை சித்தோபாயமான ஈசுவரோடு ஒரு கோவையாகச் சேர்த்து எண்ணக் கூடாது என்பது அவர்கள் கருத்து. பிரபத்தி நெறியும் பக்தி நெறியைப் போல் ஓர் உபாயமாக விதிக்கப் பெற்றிருப்பது உண்மையேயாயினும், இயற்கையாகக் கருணை சுரந்து நிற்கும் எம்பெருமானுக்குச் சேததன்' மீதுள்ள அதிருப்தியைப் போக்குவதுடன் பக்தி பிரபத்தி நெறிகளின் சக்தி ஓய்ந்து விடுகின்றது. பலனுக்கு நேரான காரணம் இயற்கைச் சக்தியும் அளவற்ற கருணையும் நிறைந்து நிற்பவன ைசர்வேசுவரனுடைய சங்கல்பமே. வேறு உபாயத்தை அருட்டிக்கச் சக்தியற்றுப் பிரபத்தியை அநுட்டித்த சேதநனுக்கு அவனது பொறுப்பை சர்வேசு வரன் தானே ஏற்றுக் கொண்டு பக்தியோகம் முதலிய கடினமான உபாயங்களின் இடத்தில் தானே நிற்கின்றான். வகுத்த அங்கங்களை மாத்திரம் உடைய பிரபத்தியை ஒரு வியா ஜமாகக் கொண்டு (Pretest) பலனை அளிக்கின்றான். இப்பிரபத்தியும் அவன் செய்விக்கச் செய்கின்றதே. இங்ங்னம் வியாஜமாத்திரமாக நிற்கும் பிரபத்தியைச் சர்வேசுவரனுடன் ஒரு கோவையாகச் சேர்த்து உபாயமாக நினைத்தல் உசிதமன்று என்பது ஆசாரியார்களின் திருவுள்ள மாகும். 2, சாத்தியோபாயம்-பக்தி; மக்களால் சாதித்துக் கொள்ளுகிற உபாயம். 3. சித்தோபாயம் - இறைவன்; முன்பே உள்ள உபாயம். 4. சேதநன்-அறிவுடைய ஆன்மா . பா தி-17