பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பிரபத்தியை உபாயமாகக் கருதுவதன் குற்றத்தைப் பிள்ளை உலக ஆசிரியர், 'இதுதன்னைப் பார்த்தால் பிதாவுக்குப் புத்திரன் எழுத்து வாங்குமாப் பேலே இருப்பது ஒன்று' என்ற சூத்திரத்தால் இனிது விளக்குகின்றார். இச்சூத்திரத் தின் பொருளைத் தெளிவாக்குவோம். புத்திரனைத் தோற்றுவித்தவன் தந்தை. ஆகையால் அவன் புத்திரனின் நலத்தை நாடுபவன்; புத்திரன் அறியாத நிலையிலும் அவனைப் பாதுகாத்து நிற்பவன். எழுத்து வாங்குதல் என்பது, சம்பந்தம் இல்லாமல் காப்பாற்றுபவன் பெயரை, சம்பந்தம் இல்லாமல் காப்பாற்றப்படுபவன் தன் மார்பில் எழுதிக் கொள்ளுதலாகும். சம்பந்தமுடைய தந்தையின் பெயரைச் சம்பந்தமுடைய புத்திரன் நீ என்னைக் காக்க வேண்டும்’ என்று தன் மார்பில் எழுதிக் கொண்டால் பிதாவிற்கும் புத்திரனுக்குமுள்ள சம்பந்தத்திற்குக் குற்றம் தோன்றும் என்பது தெளிவு. அங்ங்னமே பிரபத்தியைச் சாதனமாகக் கொண்டால் மக்களாகிய நாம் தோன்று வதற்குக் காரணனாகவும், நம் எல்லா நிலைகளிலும் பாதுகாப்பவனாகவும் உள்ள அகாரத்தின்" பொருளான வனுக்கும் மகாரத்தின் பொருளான நமக்கும் (மக்களுக் கும்) உண்டான சம்பந்தத்திற்குக் குற்றத்தை விளைவிக் கும். ஆகவே, இந்தப் பிரபத்திக்கு உபாயமாயிருக்கும் தன்மை பொருந்தாதாகின்றது. 5. ரீவச பூச-67 (புருடோத்தம நாயுடு பதிப்பு.) 6. அகாரம், மகாரம் என்பன ஓம்’ என்ற பிரண வத்தில் உள்ள எழுத்துகள். அகாரம் காப்பவனாகிய இறைவனையும், மகாரம் காக்கப்படும் பொருளான ஆன்மாக்களையும் குறிக்கின்றன. 7. இரட்சக - இரட்சிய சம்பந்தம்; பிதா - புத்திர சம்பந்தம்.