பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானமாமலைத் தோத்தாதிரிநாதன் இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் அதிகாலையில் நீராடி, தூய ஆடை அணிந்த வண்ணம் நெல்லையில் நாம் தங்குமிடத்திலிருந்து பேருந்து மூலம் சிரீ வரமங்கை' என்றும், வானமாமலை என்றும் பாராட்டப்பெறும் கான்குகேரி என்ற தலத்தை நோக்கிப் புறப்படுகின்றோம். இத் திருத்தலம் திருநெல் வேலிக்கு நேர் தெற்கில் பத்தொன்பது கல் தொலைவில் உள்ளது. திருநெல்லேலி-நாகர்கோவில் பெருஞ்சாலை வழியாகப் பேருந்தில் செல்லுகின்றோம். அந்த ஊரில் நான்கு ஏரிகள் இருந்ததால் ஊர் நான்குநேரி என்ற பெயரால் வழங்கியது. ஆனால், இன்று ஒரே ஒரு ஏரி தான் உள்ளது. அது திருக்கோயிலை அடுத்துள்ளது. ஆதியில் கோயிலின் கருவறையே குளத்திற்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இன்றும் குளத்தில் நீர் நிறைந்திருக்கும்பொழுது கோயிலின் கருவறையைச் சுற்றி ஒன்றிரண்டு அடிநீர் நிற்பதைக் காணலாம். இந்தத் திருத்தல்த்தில் திருக்கோயில், குளம், ஏரிக்கரையிலுள்ள மரங்கள் எல்லாம் பரமபத நாதனை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். இந்தத் திவ்விய தேசத்து எம்பெருமானை நம்மாழ் வார் மட்டிலும் மங்களாசாசனம் செய்துள்ளார். தாம் வந்துகொண்டிருக்கும் பேருந்து ஊரை நெருங்கியதும் ஊரின் நீர்வளம், நிலவளம் நம் கண்ணில் படுகின்றன சேற்றுத் தாமரை செந்நெலுாடுமலர் சிரீவர மங்கல நகர்’ தேனமாம் பொழில் தன் சிரீவர மங்கலம்' சேறு கொள் கரும்பும் பெருஞ்செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை' என்ற ஆழ்வார் வாக்குகளில் ஆழங்கால் படுகின்றோம்! நாம் இவர்ந்து வரும் பேருந்தும் ஊருக்குள் வந்து சேர்கின்றது. ஊர் மிகச் சிறிய ஊரும் அல்ல; பெரிய 8. திருவாய். 5.1 9. திருவாய் 5.7:1 10. ഒു. 5.1:6 11. ഒു 5,7:10