பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானமாமலைத் தோத்தாத்திரிநாதன் 宠每摄 திருப்பணிகளின் விளைவு இந்த மண்டபம். உற்சவ காலத்தில் இம் மண்ட த்தில் உற்சவரை எழுந்தருளச் செய்து அலங்காரம் பண்ணி உலா வரச் செய்வார்கள். இந்த மண்டபத்தைச் சுற்றி ஒரு பிராகாரம் உள்ளது. மண்டபத்தின் வடபுறம் உள்ள அறைகளில் எம் பெருமானின் வாகனங்கள் பாதுகாப்புடன் வைக்கப் பெற்றுள்ளன. இடப்புறம் உள்ள வீரப்ப நாயக்கர் மண்டபத் தின் தூண்களில் நல்ல சிற்பவடிவங்களைக் கண்டு மகிழலாம். இந்த மண்டபத்தை அடுத்து இலக்குமி நாராயணன், இலக்குமிவராகர், வேணுகோபாலன், தசாவதாரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. செவந்தி மண்டபத்திற்குப் பின்புறம் உள்ள கொடி மரத்தைக் கடந்து உட்கோயிலை அடைகின்றோம். உட் கோயிலின் முன்பும் உள்ளது குலசேகரன் மண்டபம். இங்கு வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார் சந்நிதி களும், மணவாள மாமுனிகள், உடையவர் (இராமாநுசர் பிள்ளை உலக ஆசிரியர் சந்நிதிகளும் இருக்கின்றன. ஆழ்வார்களுக்கெனத் தனிச் சந்நிதியும் இங்கே உண்டு. இதில் நம்மாழ்வார் திருமேனியைத் தவிர ஏனைய ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன. காரணம் ஏன் என்று அர்ச்சக ரைக் கேட்டால் அவர் உற்சவரின் முன்புள்ள சடகோபத்தில் பொறிக்கப் பெற்றுச் சிறப்புடன் திகழ்கின்றார் என்று கூறுவர். இச்சந்தி திகளே யன்றி இத்திருத்தலத்தில் இராமர் சந்தி தி கண்ணன் சந்நிதி சக்கரத் தாழ்வார் சந்நிதி களும் உள்ளன. இவர்களையெல்லாம் சேவித்துக்கொண்டு அர்த்த மண்டபத்தை அடைகின்றோம். இந்த அர்த்த மண்டபத் திற்கு வெளியில் சந்நிதியை நோக்கிக் கூப்பிய கையராய் நிற்கும் பெரிய திருவடியைக் காண்கின்றோம். கருவறையை அடைந்ததும் கிழக்கே நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருக்கும் திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் தோத்தாத்திரிப் பெருமாளைப் பட்டாபிஷேகக் காட்சியில்