பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானமாமலைத் தோத்தாத்திரிநாதன் 263 உன்னை விட்டு என்னால் தரித்திருக்கமுடியவில்லை’ என்கின்றார். சென்றால் குடையாம் இருந்தால் சிங்கா தனமாம் என்று எல்லா அடிமைத் தொழில்களையும் செய்யும் திருவனந்தாழ்வானைப் போல் என்னையும் அடிமை கொண்டருள வேண்டாவோ? என்ற குறிப்பு 'அரவின் அணை அம்மானே' என்ற சொற்றொடரில் தொனிப்பதைச் சிந்திக்கின்றோம். சீரீவர மங்கலநகர் வீற்றிருந்த எக்தாய் உனக்கு மிகையல்லன் அங்கே?' என்ற அடியில் பொதிந்துள்ள ஏக்கத்தை நினைந்து பார்க்கின்றோம். நீ பரமபத்திலிருந்தாயாகிலும் நான் ஒருவாறு தரித்திருக்கலாம். எனக்காக வந்துள்ள இடத் தில் நான் எப்படி இழப்பது? உன்னாலே காக்கப் பெற வேண்டிய சேதநவர்க்கங்களில் நான் புறம்பு பட்டவன் அல்லேன்' என்று ஏங்குவதைக் காண்கின்றோம். ஆழ்வாரை அடிமை கொள்வதால் எம்பெருமானுக்குக் கிடைக்கும் பேற்றை ஈட்டாசிரியர் அருமையான ஓர் உவமையால் விளக்குகின்றார். :பால் குடிக்கும் குழந்தையை, பால் குடித்து வயிறு நிறையக் கண்டு உகக்கும் அன்னையைப் போல, அடிமையாக இருப்பவன் ஸ்வரூபம் பெற்று அடிமை செய்கை சேவிக்குப் பேறேயன்றோ?' என்பது எண்ணி எண்ணி மகிழத் தக்கது. அடுத்து. ஆழ்வாரின் அநுபவம் இராமாவதாரத்தில் செல்லுகின்றது. இலங்கை சென்ற அம்மானே?’ என்று இறைவனை விளிக்கின்றார். ஒரு பிராட்டிக்காக இலங்கை யைக் கிழங்கெடுத்த உனக்கு என் வரையில் இந்த சம்சாரத்தைக் கிழங்கெடுத்தல் அரிதோ? அசோகவனத் தில் பிராட்டிக் கருகில் ஒரு திரிசடை இருந்தாள். இங்கு நான் தனியாக அன்றோ இருக்கின்றேன்?’ என்ற 16. திருவாய் 5. 1