பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் தொனிப் பொருள் இதில் அடங்கியிருப்பதை எண்ணி, மகிழ்கின்றோம். மேலும், 'அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து, நான் எங்குற் றேனுமல் லேன்' என்று அங்கலாய்க்கின்றார். 'நான் நித்திய சேவை புரியும் நித்திய சூரிகளிலும் சேர்ந்தவன் அல்லேன்; உன்னைக் கனவிலும் அறியாத சம்சாரிகளிலும் சேர்ந்த வன் அல்லேன். உன்னைக் காணவேண்டுமென்ற அவாவி னால் ஒருவருடனும் சேராதவனாக வாழ்கின்றேன். துணைற்ற எனக்கு நீ உறுதுணையாக இருந்து அருள வேண்டும்’ என்கின்றார். அடுத்து, எம்பெருமானின் அளவற்ற கருணையை எண்ணி,

பொருளல் லாதஎன்னைப்

பொருளாக்கி அடிமை கொண்டாய்' என்கின்றார். ஒன்றுக்கும் பற்றாத என்னையும் ஸ்வரூபம் பெற்றவனாம்படி அங்கீகரித்துத் திருவாய்மொழி பாடும் கைங்கரியத்தை என் பக்கலில் திருவுள்ளம் பற்றினாய். அங்ங்னமே இப்போதும் அருள் செய்வாயாக’ என்று வேண்டுகின்றார். ஆழ்வாரின் அநுபவம் அடுத்துக் கிருஷ்ணாவதாரத்தில் செல்லுகின்றது. "மாறு சேர்படை நூற்றுவர் மங்க ஓரைவர்க் காயன்று மாயப்போர் பண்ணி கீறு செய்த எந்தாய்!' (மங்க-அழியும்படி; ஐவர்-பாண்டவர்; மாயப்போர். ஆச்சரிமான யுத்தம்; நீறு-சாம்பல்) 17. திருவாய் 5. 1 , 2 18. திருவாய் 5, 7 : 3 ! 9. ഒു. 5. ? : 4