பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 பாண்டிநாட்டுத் திருப்பதிகள் செயலும்," இரட்டை மருத மரத்தை வீழ்த்திய செயலும்* அசுர ஆவேசம் கொண்ட ஏழு எருதுகளை அடர்த்து நப்பின்னையை மணந்த செயலிலும்.’’ வாமனமாணியாய், வந்து மூன்று உலகங்களையும் மாபலியினிடமிருந்து கவர்ந்த கள்ள மாயத்திலும்' ஆழ்வார் ஆழங்கால் பட்டு அநுபவிக்கின்றார். அந்த அநுபவத்தை நாமும் பெறு கின்றோம். பாசுரங்களில் ஆழ்வார் 'தமியேனுக்கு அருளாயே' :அடியேன் தொழ வந்தருளே,' அடியேனை அகற்றேலே' 'அருளாய் உய்யுமாறு எனக்கே..' என்றெல்லாம் வேண்டி நிற்பது போலவே, நாமும் எம்பெருமானிடம் விண்ணப்பிக்கின்றோம். அர்ச்சகரிடம் தீர்த்தம் திருத்துளாய் பெற்று, சடகோபம் சாதிக்கப்பெற்று அர்த்தமண்டபத்திலிருக்கும் உற்சவரைச் சேவிக்க வருகின்றோம். உற்சவரின் திருநாமம் தெய்வ நாயகன் என்பது. அவர் உபயநாச்சியார், சிரீவர மங்கைத் தாயார்; ஆண்டாள் முதலியோர் அருகில் இருக்க, பட்டாடை அணிந்து மகர கண்டிகை முதலிய அணிகளுடன் பெரியதொரு பீடத்தில் எழுந்தருளியிருக்கின்றார். அவரை, ஆறெ னக்குகின் பாதமே சரணாகத் தந்தொழிந் தாய் உனக் கோர்கைம் மாறு நானொன் றிலேனென தாவியு முனதே சேறு கொள்கரும் பும்பெருஞ் செந்நெலும் மலிதண் சிfவரமங்கை நாறு பூந்தண் துழாயமுடியாய்! தெய்வ நாயகனே' 22. திருவாய் 5.7:9 23. திருவாய் 5.7:9 24. ഒക്ട 5 7.9 25. ഒു. 5.7; 9 26. ഒു 5.7:2 27. ഒു. 5.7; 6. 28. ഒു 5.7:7 29. ഒു. 5.7; 9: 30. ഒട്ടു 5. 7: 10