பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானமாமலைத் தோத்தாத்திரிநாதன் 宠器臂 (ஆறு-வழி; சரண்-உபாயம், கைம்மாறு - பதிலு:ப காரம்; ஆவி-ஆன்மா நாறு-மணம் வீகம்.) என்ற பாசுரத்தை ஒதிச் சேவிக்கின்றோம். ஏற்கெனவே தமக்குக் கிடைத்திருக்கும் பேற்றிற்கு எம்பெருமானுக்கு நன்றி செலுத்துகின்றார் ஆழ்வார் இப் பாசுரத்தில். உன் திருவடிகளே சரணம்' என்றிருக்கும்படி என்னைச் செய்தருளின பேருதவிக்குப் பதிலுதவி ஒன்றும் இல்லை' என்கின்றார். இங்கனம் மூலவரையும் உற்சவரையும் சேவித்து இறையதுபவம் பெற்ற நிலையில், திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் திருப்பாசுரமும் நம் நினைவிற்கு வருகின்றது. வோனோர் முதலா மரம் அளவானப்பிறப்பும் ஆனேற்கு அவதியிடல் ஆகாதோ தேனேயும் பூவர மங்கை புவிமங்கை காயகனே சீவர மங்கை அரசே' இவானோர்.தேவப்பிறவி, மரம்-தாவரப் பிறவி, அவதி. முடிவு, தேன்.ஏயும்-மது நிரம்பிய, பூ-தாமரை)

நால்வகை யோனிகளிலும் பிறந்து பிறந்து வருந்தி உன்னை அடைக்கலம் புகுந்து இளைத்த பாவியாகிய எனக்கு இப்போது உன்னைச் சரண்மாக அமர்ந்து புகுந்து நிற்கின்ற நல்லறிவை நீ அருளியிருத்தலால், இனியாவது அப்பிறவித் துயரம் நேராது என்னைக் கடைக்கணித்துப் பாதுகாத்தருள்க’ என்ற அய்யங்கார் அவர்களின் விண்ணப்பத்தையே நம் விண்ணப்பமாகக் கொண்டருள வேண்டும் என்று வானமாமலையை வேண்டி நிற்கின்றோம்.

இந்நிலையில் ஆசாரிய ஹிருதயத்தின் சூத்திரத்தினை யும் சிந்திக்கின்றோம். 31. நூற். திருப். அந்- 1