பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. குறுங்குடிக் குழக நம்பி’ வைணவ சமயத்தில் அடிப்படையாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில மரபுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று அர்த்தபஞ்சக ஞானம்’ ஆகும். இறைவன் இயல்பு, உயிரின் இயல்பு, உயிர் இறைவனை அடையாவாறு உள்ள தடையின் இயல்பு, அத்தடையினை நீக்கி உயிர் இறைவனை அடைவதற்குரிய உபாயத்தின் இயல்பு, உயிர் இறைவனை அடைந்து பெறும்பயன் ஆகிய பொருள்களையும் ஒவ்வொருவரும் ஒருதலையாக உணர்தல் வேண்டும் என விதித்துள்ளனர் வைண ஆசாரியர்கள். உலகப் பற்றற்றுத் தன்னலம் சிறிமிமல்லாத சமயச் சான்றோர்கள் தாம் புரியும் ஒவ்வொரு செயலையும் இறைவனே செய்விக்கின்றான் என்று கருதுகின்றனர். அன்றியும், அவர்கள் தமக்குத் துன்பம் ஏதேனும் நிகழ்ந் தால் அதற்குக் காரணம் தம்பாவம், தம் அறியாமை என்றும், நன்மை நிகழ்ந்தால் அதற்குக் காரணம் இறைவன் அருள் என்றும் கருதுதலும் அவர்களிடம் இயல்பாகக் காண்கின்றோம். ஆழ்வார்களின் தலைவரான

  • கம்பி : நம்பு என்பது விருப்பம் என்றும் பொருள்

தரும் ஓர் உரிச் சொல். அது பகுதியாக வந்தது நம்பி என்பது. எல்லோராலும் விரும்பப் படுபவன் என்பது பொருள். நம்பி என்பதற்குப் பெருமை, செல்வம், குணம் முதலிய எல்லாம் நிறையப் பெற்றவன் எனப் பொருள் கூறுவர் வியாக்கியான ஆசிரியர்.