பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்குடிக் குழக நம்பி 27 t 4*్క நம்மாழ்வார் தாம் பாடும் பாசுரங்கள் அனைத்தையும் இறைவனே தன்னுள்ளிருந்து கொண்டு பாடுவிக்கின்றான் என்னும் கருத்தைப் பன்னிப் பன்னி உரைக்கினறார். எடுத்துக்காட்டாக, என் சொல்லால் யான்சொன்ன இன் கவி என்பித்துத் தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்.' என்ற ஆழ்வார் திருவாக்கினாலேயே இதனை அறியலாம், இதனால்தான் ஆழ்வாரின் அருளிச் செயல்கள் தமிழ் மறை என்று போற்றுப் பெறுகின்றன. சோமவேதசாரம்’ எனக் கருதப்பெறும் திருவாய் மொழி எம்பெருமானின் குணம் செயல்களைப் பாராட்டிப் பாடிய பாக்கள் எனப் பெரியோர்களால் கருதப் பெற்றாலும் அதன் கண் மேற்குறிப்பிட்ட ஐந்து பேருண்மைகளும் ஆங்காங்கு அமைந்துள்ளன. அங்ங்ணமிருப்பினும் ஒவ்வொரு பொருள் ஒவ்வோரிடத்துத் தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்திருத்தலை உணர்ந்து, ஒவ்வொரு பொருளை இவ்விரண்டு பத்துகள் (இரண்டு பத்து-20 பதிகங்கள்') விளக்குகின்றன. எனத் திருவாய்மொழி முழுவதற்கும் ஓர் அமைதி கூறியுள்ளனர் வியாக்கியாதரர் கள். திருவாய்மொழியின் முதலிரண்டு பத்துகள் இறைவன் இயல்பையும், மூன்று நான்காம் பத்துகள் உயிரின் இயல்பையும், ஐந்து ஆறாம் பத்துகள் உபாயத்தின் இயல்பையும் ஏழு எட்டாம் பத்துகள் தடையின் இயல்பை யும், ஒன்பது பத்தாம் பத்துகள் பயனையும் விளக்குவன வாகும் என்று அவர்கள் வகுத்துக் காட்டியுள்ளனர். 1. திருவாய் 7, 9 : 2 2. வைணவ மரபில் பதிகங்கள்' என்று வழங்குதல் இல்லை. நம்மாழ்வாரின் பதிகங்கள் திருவாய்மொழி என்றும், ஏனைய ஆழ்வாரின் பதிகங்கள் திருமொழி: என்றும் வழங்கப்பெறுகின்றன.