பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் இறைவனை அடைவதற்குக் கருமம், ஞானம், பக்தி முதலிய உபாயங்கள் உள்ளன. ஆயின், இவையெல்லாம் ஒரு தலையாகப் பயனை அடைவிப்பன அல்ல. அன்றியும், இவற்றை மேற்கொள்வார் சிறந்த அறிவும், மிக்க ஆற்றலும். உடையவராய் இவற்றைக் கொண்டு செலுத்துதல் வேண்டும் ஆதலால், இறைவன் திருவடிகளையே தஞ்சமாக அடைந்து அவன் அருளையே உபாயமாகக் கொண்டு, அதற் கேற்றவாறு ஒழுகுதல் சிறந்த முறையாகும் என்று ஆன்றோர் துணிந்துள்ளனர். இதுவே நாமாழ்வாரின் கருத்துமாகும். அங்ங்னம் இறைவன் திருவடிகளையே தஞ்சமாக அடைந்து அவனருளையே உபாயமாகக் கொண்டொழுகுமிடத்து, வே ேற | ரு ப ய த் ைத க் கொண்டொழுகுதலும் வேறொரு தெய்வத்தைத் தன்னைக் காக்குமாறு வணங்குதலும் கூடா. இதனால்தான் இந்நெறியைக் கடைபிடித்து ஒழுகுபவர்கள் மறந்தும் புறத் தொழா மாந்தர்’ என்று போற்றப் பெறுகின்றனர். இறைவன் திருவருளையே உபாயமாகக் கொள்வதால் மற்றைய கருமம், ஞானம், பக்தி முதலியவற்றைக் கைவிட்டு விடுதல் என்பது கருத்தன்று, அவற்றை இறைவனை அடைதற்குரிய உபாயம் என்று கருதாமல் மேற்கொள்ளல் வேண்டும் என்பதுவே கருத்தாகும். எனவே கருமம், ஞானம், பக்தி முதலியவற்றை உபாயம் என்று கருதாமல் மேற்கொண்டு, இறைவன் திருவருளே உபாயம் எனக் கொண்டு ஒழுகுதல் வேண்டுமென்பதே முடிந்த முடிபாகும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற மரபும் இதனை யொட்டியதேயாகும். என்பது ஈண்டு அறியத் தக்கது. இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் நான்கு நேரியிலிருந்து திருக்குறுங்குடி நோக்கிப் போகச் சித்தமாகின்றோம். நான்கு நேரியிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாதையில் திரும்பினால் சிறிது தூரம் சென்றதும் இரண்டு பாதைகள் பிரிவதைக் காணலாம். 3. திருவா. சிவபுரா. அடி-18