பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2霄盘 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்ற பாசுரப் பகுதிகள் இவ்வூர் மலைச் சாரலை ஒட்டிய தென உணர்த்துகின்றன. குறுங்குடியின் குளிர்ந்த நீர்த் தடாகங்களில் செங்கால் அன்னம் மனம் மிக்க தாமரைப் பூவில் தன் பேடையுடன் சேர்ந்து வாழும் என்றும், மென்மையான சிவந்த கால்களையுடைய நாரைக் சேவலுக்கு உணவு தேடிக் கொண்டு கூழைப் பார்வையை புடைய அதன் பேடை வயல்களில் மேயும்' என்றும் இந்த ஆழ்வார் பேசுவதனையும் அறிகின்றோம் , இன்னும் குறுங்குடியின் சூழ்நிலையைக் காட்டும், கொல்லை முல்லை மெல்லரும் பினும் குறுங்குடியே’’’ (குறியவன் குடி-குறுங்குடி; குறியவன்-வாமனன்) என்ற இந்த ஆழ்வாரின் திருவாக்கு குற்றாலத் தின் சூழ்நிலையைக் காட்டும், கொல்லை முல்லை மெல்லரும் பினும் குற்றாலம்.' என்ற ஞானசம்பந்தரின் திருவாக்கினை நினைக்கச் செய்கின்றது. நமது பேருந்து கீழ மாட வீதியில் நிற்கின்றது. அங்கு இறங்கி ஊரைச் சுற்றுமுற்றும் பார்க்கின்றோம். பெரிய கட்டடங்கள் ஒன்றும் இல்லை. ஆழ்வ்ார் காலத்தில் ஒருகால் பெரிய ஊராகவும் பெரிய கட்டடங்களைக் கொண்டதாகவும் இருந்திருக்கலாம். நம்மாழ்வார் *குன்ற மாடத் திருக்குறுங்குடி' என்றும், தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி' என்றும், சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி' என்றும், 'மைகொள் மாடத் திருக்குறுங்குடி' என்றும், மன்னுமாடத் திருக்குறுங் 1 . பெரி. திரு. 9. 6: 3 13. டிை 9, 6: 7 : 1. ബ്, 9. 6: 2 14. தேவாரம் 1. 99: 3 1്. ഒു 5. 5: 8 16. ഒു. 6.5:5 1? . ഒട്ടു. 6. 5: ' 18- 64 ప్ , స్: 8