பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பாணன் நம்பியைச் சேவிக்கின்றபோது கோயிலின் கொடி மரம் சந்நிதியை மறைக்கின்றது. பாணன் அதனைப் பொருட்படுத்தாமல் உள்ளம் உருக உடல் புளகிக்கப் பாடுகின்றான். நம்பியின் அருளால் கொடிமரம் நகர் கின்றது. இதனைக் கண்ட பாணன் மயிர்சிலிர்க்கப் பெற்று. ஆழ்வார் பாசுரங்களை கைசிகப் பண்ணில் அமைத்துப் பாடி அநுபவிக்கின்றாள். பாசுரங்களைக் கேட்டு மகிழ்ந்த நம்பியும் அவனுக்கு கம்பாடுவான்’ என்ற திருநாமமும் வழங்குகின்றார். பாடல்களை விரைவாகப் பாடுவதைக் கேட்ட நம்பி காரணத்தை வினவுகின்றார். பாணன் தான் அரக்கனுக்குக் கொடுத்து வந்த வாக்கைக் கூறுகின்றான். நம்பியின் அருளால் அரக்கனின் பசி நீங்குகின்றது. அவன் தன்னிடம் வந்த நம்பாடுவானைப் புசிக்க மறுக்க, இடை வந்த நம்பி சமாதானம் செய்து ஒரு பாடலின் இசைப் பலனைத் தாரைவார்த்து அரக்கனுக்குத் தருமாறு நம்பாடுவானிடம் சொல்ல, அவனும் அவ்வாறே செய் கின்றான். இதனால்தான் இத்திவ்விய தேசத்தில் கெளசிக ஏகாதசி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. என்பதனையும் அறிகின்றோம். குலசேகரன் மண்டபத்திற்கு முந்திய பத்தியில் தொங்கும் ஒரு மணியில் பொறிக்கப் பெற்ற பாடலால் திருவிதாங்கோட்டு மன்னன் ஒருவன் நம்பியின் பக்தனாக இருந்து இந்த மணியை அளித்துள்ளான் என்பதை அறிந்து கொள்ளுகின்றோம் குறுங்குடி நம்பியைச் சேவிக்கச் சித்தமாகின்றோம். இந்த நம்பியைப் பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். குறுங்குடியில் குழகா' என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடுகின்றார். குழகன்' என்றதற்கு மகானாக இருக்கும் தனது மேன்மையைப் பாராமல் சிறியாரோடும் கலந்து பழகுபவன் என்ற பொருள் 21. பெரி. திரு. 6.3:9