பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்குடிக் குழக நம்பி 277 உண்டு. பரமபதத்திலிருந்து எம் பெருமான் நம்போன்றவர் உய்யும் பொருட்டுச் சேவை சாதிப்பதற்மாகவே திருக்குறுங் குடியில் எழுந்தருளியுள்ளான். நம்பி என்பது இத்திருப்பதி எம்பெருமானுக்கு நம்மாழ்வாரால் சாத்தப்பெற்ற திருநாமம்.” நம்பி’ என்பது எல்லாக் குணங்களும் நிரம்பப் பெற்றவன்' பரிபூரணன்" என்ற பொருளை யுடையது. பரமபதத்திலும் எம்பெருமான் எல்லாக்குணங் களும் நிரம்பப் பெற்றவனாக இருப்பினும் அங்கு எம் பெருமானைக் காட்டிலும் குறைந்தாரின்மையால் வாத்ஸல்யம், செளசீல்யம் முதலிய எண்ணில் பல்குணங் கள் பகல் விளக்குப்போலப் பயன்படாமல் கிடக்கின்றன. அத்திருக்குணங்கள் யாவும் அர்ச்சாவதாரங்களில் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பனவாதலால் 'பரிபூரணன்' என்ற பொருளையுடைய நம்பி என்ற சொல் அர்ச்சாவதாரத்தில் அமைந்து கிடப்பதைச் சிந்திக் கின்றோம். 'குறுங்குடிக் குழக நம்பி’ என்ற அழகான பெயரில் பரவசப்பட்டு நிற்கின்றோம். குலசேகரன் மண்டபத்திலிருந்து கொண்டே கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலக் கில் சேவை சாதிக்கும் அழகிய திருக்குறுங்குடி கம்பியைச் சேவிக்கின்றோம். நல்ல அழகான வடிவம். அவரது திருமேனி அகத்தே சிலையும், புறத்தே கதையுமாக இருக்கின்ற திருக்கோலம். அதனால் இவருக்குத் திருமுழுக்கு இல்லை. இவருடன் உபய நாச்சியார், மார்க்கண்டேயர், பிருகுமுனிவர் ஆகியோர் எழுந்தருளி யுள்ளனர். இவர்களைச் சேவிக்கும்பொழுது நம்மாழ் வாரையும் திருமங்கையாழ்வாரையும்பற்றிய நாயகி பாவனை நம்மையும் பற்றத்தொடங்குகின்றது. முறையே அவர்களது திருவாய்மொழியையும்’ திருமொழியையும்’ ஒதி உளங்கரைகின்றோம். 22. திருவாய் 1.10:9 24, பெரி.திரு. 9.5:9 23. 63% 5.5