பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பராங்குச நாயகி உருவெளித் தோற்றமாக திருக் குறுங்குடி எம்பெருமானைச் சேவித்ததை எண்ணு கின்றோம். அங்ங்னம் சேவித்தவள் அப்பெருமானைப் பற்றிப் பேசுதல் புலம்புதல் முதலியன செய்கின்றாள். அது கண்ட அன்னையரும் தோழியரும் தலைவன் திறத்தில் எவ்வளவு காதல் பெருகினும் அவன் வரும்வரை ஆற்றி யிருத்தலே மகளிர் கடமையாகும் என்றும், அவளது செயல் கள் தம் குடிக்குத் தகாதவை என்றும் கூறி விலக்கு கின்றனர். அவர்கட்கு விடை கூறும் முறையில் இப்பதிகம் மேகள் பாசுரமாக நடைபெறுகின்றது.

திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட அக்கணமே சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயும் என் முன்னே தோன்றுகின்றன." மேகத்தில் மின்னல் தோன்றினாற்போலே யிருக்கும் அவனது பூணு லும், பரந்த மின்னல் ஓரிடத்திலே சுழித்தாற் போன்ற மகர குண்டலமும், திருமறுவும் திருவாபரணங் களும், திருத்தோள்களும் என்னைச் சுற்றிவளைத்துக் கோள்ளுகின்றன." அவனது வென்றிவில், கதை, வாள், திருவாழி, திருச்சங்கு ஆகிய பஞ்சாயுதங்களும் என்னைச் சூழ்ந்து கிடக்கின்றன." அவனது செவ்வித் திருத்துழாய்த் தனி மாலையும், உபய விபூதிக்கும் தான் நாதன் என்பதனை நிலைநாட்டும் திருவபிடேகமும், அந்த மாலைக்கும் திருமுடிக்கும் பாங்கான திருமேனியும் திருவரை பூத்தாற் போன்று தோற்றுகின்ற திருப் பீதாம்பரமும் அதன் மேலாபரணமான விடு நாணும் இடைவிடாது என்ன ருகே நின்று ஒளிருகின்றன.* அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாற். போன்றதான திருப்பவளமும், அழகியவாய் நீண்டு விளக்குகின்ற திருப் புருவங்களும் அவற்றிற்குத் தகுதி யாகத் திகழ்கின்ற திருக்கண்களும் என் உயிர் நிலையிலே

25. திருவாய் 5.5:1 26. டிை 5-5:2 27. 6మిత్తి 5-5:3 28. திருவாய் 5. 5 : 4