பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வாடையின் தன்மை எரிகின்ற நெருப்பின் தன்மையை ஒத்துள்ளது. அப்பெருமானின் மாயச் செயல்கள் இன்னும் எத்தனையோ?" காளையின் கழுத்தில் தொங்கும் மணியின் ஓசை என் நெஞ்சைச் சோர்வுபடச் செய்து இரவு முழுவதும் என்னை உறங்காதிருக்கச் செய்துவிடுகின்றது.37. திண் திமிலேற்றின் மணியொலியும், ஆயன் தீங்குழலோசை யும், தென்றலோடு கூடிய மாலையும், கோல இளம்பிறையும் என் ஆவியைப் படுத்தும்பாடு சொல்லிமுடியாது’. பொழுது போக்கற்று அண்டைப் பெண்கள் வம்புகள் பேசி இழித்துக் கூறினும் நீல மணிவண்ணரை மறக்கவே மாட்டேன்.? அவன் என் தொல் நலத்தையெல்லாம் கொள்ளை கொண்டு எனக்குப் பொன் மேனியைத் தந்து போயினன்.49 ஆகவே, என்னைக் கொண்டு திருக்குறுங்குடியில் சேர்த்து விடுங்கள் என்று தாயரையும், தோழியரையும் வேண்டு கின்றாள். இது கண்ணனை அடைய வேண்டும் ஆர்த்தியைப் பொறுக்கமாட்டாத ஆண்டாள் தன்னைக் கண்ணன் எழுந்தருளியிருக்கும் இடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்குமாறு வேண்டுவதையும்" நினைக்கச் செய்கின்றது. இந்த நம்பியின் கருவறைக்கு அடுத்த கட்டில் வைணவ நம்பி என்ற உற்சவர் எழுந்தருளியுள்ளார். இவரும் உபய நாச்சியார், நீளாதேவி, குறுங்குடிவல்லி நாச்சியார் ஆகியோர் சூழ இருக்கின்றார். அவரையும் சென்று சேவிக் கின்றோம். இவருக்கு வைணவ நம்பி’ என்ற பெயர் ஏற்பட்டதற்குரிய காரணத்தையும் உசாவி அறிகின்றோம். ஒரு சமயம் பாஷ்யக்காரர் (இராமாநுசர்) இந்தத் திவ்விய தேசத்திற்கு எழுந்தருளினபோது இந்த நம்பி ஒரு சீடன் போல் அவர் முன் வந்து அவரால் பஞ்ச சம்ஸ்காரம் حساسیسمس سیسی. 36. பெரி. திரு.9.5:3 87. ഒു. 9, 5 : 4 88 , ഒു. 9, 5 : 5 89. ഒു. 9, 5 : 6 40. டிை திரு 9. 5 : 9 41. நாச். திரு. 12