பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தை மேற் கொள்வன் என்பது சாத்திரப் பிரமாணம். அவன் கிருத யுகத்தில் உள்ளவர்கள் சத்துவ குணம் நிறைந்தவர் களாகவும் தூய்மையான நிறத்தை உகக்குமவர்களாக வும் இருப்பதால் அவர்கட்காகப் பால்போன்ற வெண் ணிறத்தைக் கொள்வன் எம்பெருமான்; அந்நிறமே வெள்ளியான்’ என்று அநுசந்திக்கப் பெற்றது. கலி யுகத்தில் எந்த நிறங் கொண்டாலும் ஈடுபடுவாரின்மை யால் இயற்கையான கரிய நிறத்தைக் கொள்வன்; அந்த நிறமே கரியான் எனப்பட்டது. துவாபரயுகத்தில் எம்பெருமான் பசுமை நிறம் கொள்வானாகையால் அந்த நிறத்தை மணிகிறவண்ணன்’ என்று அநுசந்தித்தார் ஆழ்வார். இங்ங்னம் நாம் சிந்தித்த நிலையில் நம் கவனம் திருமஞ்சனமூர்த்தியின்மீது (தீர்த்தபேரர்) செல்லு கின்றது. இவரையே திருமங்கையாழ்வார் தேவதேவ பிரான்' என்று பாடியுள்ளார். நித்திய உற்சவரை நம் கண் தேடுகின்றது. இவரைப் பெரியாழ்வார் குளிந்துறை கின்ற கோவிந்தன்' என்று மங்களாசாசனம் செய்துள் ளார். நரகங்ாசன்’ என்று இந்த ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பெற்றவரே பலிபேரர் (வேள்வி மூர்த்தி). இவர்களையெல்லாம் தனித்தனியே சேவிக்கின்றோம். இந்தப் பஞ்ச பேரருடன் காளிங்க நடனம் புரியும் கண்ண னும், ஊஞ்சலில் சந்தானகிருட்டிணனும் எழுந்தருளி யுள்ளனர். இங்குத் தெற்குப்புறத்தில் கதம்ப முனிவரும், மேற்கே நான்முகனும் வெள்ளைத்தாமரை நாயகியும், தேவர்களும், வடக்கே மதுகைடவர்களும் தேவேந்திரனும் பூரூர்வ சக்கரவர்த்தியும் இருப்பதைக் காண்கின்றோம். கதம்பமுனிவர் உரகமெல்லணையானை வழிபட்டு வருங்கால் இந்திரன், வெள்ளியான் கரியான் என்று வழங்கப்பெறும் உற்சவரின் திருமேனியை மூன்று 26. பெரியாழ். திரு. 9. 10 : 9. 2? . ഒു. 4, 4 : 8. 28. ഒു 4. 4; A