பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்குடிக் குழக நம்பி 28i செய்யப்பெற்று, திருமண் சாத்திக் கொண்டு வேதாந்தார்த்தமும் கேட்டார் என்பது வரலாறு." ஆனது பற்றியே இத்திருத்தலம் வைணவ வாமன கூேடித்திரம்’ என்று வழங்கப் பெறும் மரபையும் அறிந்து கொள்ளு கின்றோம். இந்த இரண்டு நம்பியரையும் சேவித்த பிறகு வெளி வந்து பிராகாரத்தில் வலம் வருகின்றோம். தெற்குப் பிரகாரத்தில் தனித்தனியே கோயில் கொண்டிருக்கும் இலக்குமி நரசிம்மனையும், ஞானப்பிரான் இலக்குமிவரா கனையும் சேவிக்கின்றோம் தனிக் கோயில் கொண்டு சேவை சாதிக்கும் குறுங்குடி வல்லித் தாயாரையும் அடைந்து அந்த அன்னையின் திருவருளையும் பெறு கின்றோம். மேற்குப் பிராகாரத்தில் வருங்கால் தசாவதாரப் பெருமாள், சீநிவாசன், ஆண்டாள் அன்னையார் இவர்கள் நமக்குச் சேவை சாதிக்கின்றனர். இவர்கள் இன்னருளைப் பெற்றுக் கொண்டு வடக்குப் பிராகாரத்தில் நடந்தவண்ணம் தெற்கே திரும்பினால் அங்கு ஒரு சிறு கோயில் தென்படுகின்றது. அத்திருக் கோயிலில் சிவபெருமான் இலிங்க வடிவில் காட்சி வழங்கு கின்றார். இவரை மகேந்திரகிரி நாதர் என்றும் பக்கம் நின்ற பிரான்’ என்றும் வழங்கி வருகின்றனர். இந்தப் பக்கத்தில் வந்து கொண்டிருக்குங்கால் தனித்தனியே கோயில் கொண்டு சேவை சாதிக்கும் நி எற நம்பி, வீற்றிருந்த நம்பி, கிடந்த நம்பி ஆகியோரையும் கண்டு வணங்குகின்றோம். இவர்கள் அருகில் பூமியில் அழுந்தப் பெற்ற நிலையில் தலையைச் சிறிது பூமிக்கு வெளியில் நீட்டிய வண்ணம் மகாபலியும் நமக்குக்காட்சிதருகின்றான். அந்த வள்ளலையும் கண்டு மகிழ்கின்றோம். இந்தத் திருக்கோயிலில் ஐந்து நம்பியரைச் சேவித்த நம் மனம் கம்பீரமான நம்பி ஒருவனையும் பார்க்க விழைகின்றது. அவன் கோயிலில் இருக்க விரும்பாது மலையின்மீது ஏறி நிற்கின்றான். இவனை மலைமேல் கம்பி என்று வழங்குவர் இவன் கோயில் கொண்டிருக்கும் இடம் கோயிலிலிருந்து ஐந்து கல் தொலைவிலுள்ள ஒரு மலை- மூன்று மைல் வரை அந்த இடத்திற்கு வண்டிகள் 42. குருபரம்பரையில் எம்பெருமானார் வைபவத்தில் இந்த வரலாறு காணப் பெறுகிறது.