பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்குடிக் குழக நம்பி 283 நம்மாழ்வாரைப் பெற்றார் என்ற குறிப்பு இந்தப் பாசுரத் தால் அறியக் கிடக்கின்றது. நம்மாழ்வாராகிய தலைவி, ‘நல்கூர்ந்தார் செல்வமகள்' என்றாற்போல் அரிதாகப் பெற்றுச் செல்வமாக வளர்க்கப் பெற்றவள். மிக்க மென்மைத் தன்மையுடையவள்; மிக்க இளமைப் பருவ முடையவள் என்ற இத் தன்மையெல்லாம் நம்மாழ்வா ருடைய சிறப்பியல்புகளைக் குறிப்பாலுணர்த்துவனவாகும். இப்பாசுரத்தைச் சிந்தித்து இக் குறிப்புகளையெல்லாம் உணர்கின்றோம். திருவாலித் திருநகரியில் திருவவதரித்து அடியார்க்கு எளியனாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் பல திவ்விய தேசங்கள் எல்லாம் சென்று அந்த எமபெருமான்களைச் சேவித்து மங்களா சாசனம் செய்து பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தம் இறுதி நாட்களைக் கழித்துத் திருநாட்டுக்கு எழுந்தருளிய செய்தியையும் அறிகின்றோம். அவரது கோயில் ஊருக்கு வடகிழக்கில் அரை மைல் தொலைவில் உள்ளது. திருக் குறுங்குடி நம்பியின் சந்நிதியிலுள்ள புஷ்கரிணி கரண்டமாடும் பொய்கை என்ற திருநர்மத்தால் வழங்கி வருகின்றது. இத்திருப் பெயரைக் கேட்டதும், 'கரண்டமாடு பொங்கையுள் கரும்பனைப் பெரும்பழம் புரண்டுவீழ வாளைபாய் குறுங்குடி நெடுந்தகாய்' (கரண்டம்-நீர்க் காக்கை; வாளை-மீன் வகைகள்} என்ற திருமழிசையாரின் பாசுரத்தை நினைக்கின்றோம். நீர்க் க்ாக்கைகள் சஞ்சரிக்கும் பொய்கையில் பெரியகரிய பனம் பழங்கள் விழுந்து புரள்கின்றன. அவற்றை நீர்க் காக்கைகள் என்று ம்யங்சி வாளை மீன்கள் அஞ்சிப் பாய்கின்றனவாம். ஆழ்வாரின் திருவாக்கு பொய்யாகா வண்ணம் அப்புஷ்கரின்யின் கரையில் ஒரு திருப்பனை மரம் நம்பியின் திருவருளையே தாரகமாகக் கொண்டு இன்றும் வளர்ந்திருப்பதைக் கண்டு பெருவியப்பு அடைகின்றோம். இந்த நிலையில் ஆசாரிய ஹிருதயத்தின், ہ<---- صحس۔سیسی-سی-بیس۔سیسر 44. திருச்சந்த விரு-62