பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோட்டியூர் எந்தை 13 பிராட்டிமார் திருமேனிகளுடன் தேவலோகத்தினின்றும் கொணர்ந்து எழுந்தருளப் பண்ணி மாமுனிவரிடம் அளித்ததாகப் புராணவரலாறு. இந்தச் சந்நிதியில் தீர்த்தம் திருத்துழாய் பெற்றுச் சடகோபம் சாதிக்கப் பெற்றதும் தாயார் சந்நிதிக்குப் போகச் சித்தமா கின்றோம். விமானத்திற்குத் தெற்கிலிருப்பது தாயார் சந்நிதி, திருமாமகள் நாச்சியார் என்ற திருநாமமுடைய இவரை யும் வடபுறத்தில் தனிக் கோயில் கொண்டுள்ள ஆண்டானை யும் சேவித்து நடுத்தளத்திற்குச் செல்லுகின்றோம். நடுத்தளத்தில் இருப்பவர் கின்ற நாராயணன்'; இவர் பெரிய பிராட்டியாருடனும் பூமிப்பிராட்டியாருடனும் சேவை சாதிக்கின்றார். இப்பெருமான் கின்ற நம்பி’ என்றும் *உபேந்திரன்’ என்றும் திருநாமம் பெற்றிருப்பவர். இந்தத் தளம் இந்திரலோகம் இங்கு ஏழுமுனிவர்களும் தேவர்களும் ஒவியங்களில் தீட்டப்பெற்றுள்ளனர். இந்த எம்பெருமான் திருவருளைப் பெற்று வெளியில் வருகின்றோம். இந்தத் தளம் உட்சுற்று, வெளிச்சுற்றுகளுடனும் நான்கு புற வாயிலோடும் விளங்குவதைக் காண்கின்றோம். அன்றியும், இங்கு மூலைக்கு இரண்டாக உள்ள எட்டு விமானங்களின் உட்கூட்டையும் பார்க்கின்றோம். அடுத்து, மேல்தளத்திற்கு வருகின்றோம். இது 'பரமபதம’ என்ற திருநாமம் பெறும். இங்கு, பெரிய பிராட்டியார் பூமிப்பிராட்டியார் இருபுறமும் இருக்கும் நிலையில் பரமபதநாதன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்றார். மூன்றுபுறச் சுவர்களிலும் நித்திய சூரிகள், முக்தர்கள், ஆழ்வார்கள், தேவர்கள், முனிவர்கள், திருப்பாற்கடல், மணிமுத்தா நதி, பத்து அவதாரங்கள் இவற்றின் ஒவியங்கள் வரையப் பெற். றுள்ளன. இத்தளத்தின் முன்வாசலில் இத்தலத்தில் உடல்