பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 மதிப்புரைகள் temples and beauty of the idols, but has vorifually spelt out the visistadvaita doctrine by annotating the psalms. of the apostles (Alvars). The book will be a valuable travel companion to those desiring to visit these sacred temples... The treatment of padmanabha in Trivandrum is excellent. Hindu (26-12-71) 2. தொண்டை காட்டுத் திருப்பதிகள் முதற்பதிப்பு 1973) ரூ. 10 00 :இந்நூலின் வாயிலாக இத்திருப்பதிகளின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே மானசீகமான திவ்விய தேச யாத்திரைக்கு நம்மை இரயில் வண்டிகளிலும் பேருந்து களிலும் அழைத்துச் செல்லுகின்றார் இந்நூலாசிரியர். திருக்கோயிலிலுள்ள மதில்கள், மண்டபங்கள், மூர்த்திகள், தீர்த்தங்கள் இவற்றையெல்லாம் சுற்றிக்காட்டுகின்றார்; சுட்டியும் உரைக்கின்றார்; திருத்தலங்களின் வரலாறுகளை யும் கூறுகின்றார். அத்துடன் நில்லாது ஆழ்வார் பெரு மக்கள் மங்களாசாசனம் செய்து எம்பெருமான்களை அநுபவித்த நெஞ்சு நெக்குருகும் சில பாசுரங்களையும் பாடி நம்மையும் அவ்எம்பெருமான், எம்பெருமாட்டியார் இவர்கள் எதிரே கொண்டு நிறுத்தி ஆனந்தச் கடலில் ஆழ்த்துகின்றார். இவற்றிற்கிடையே வைணவ சமயக் கருத்துகள் பலவற்றை நம் சிந்தையில் தூவி சிந்தனையை யும் கிளறுகின்றார். நாமும் மானசீகமாக திவ்விய தேச யாத்திரையை நிறைவு செய்து கொண்டோம் என்ற மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கின்றோம். இத்தகைய நூல் நிலைத்து வாழ்க’ -ஜஸ்டிஸ் என். கிருஷ்ணசாமி ரெட்டியார் சோழ நாட்டுத் திருப்பதிகள் (2 பகுதிகள்) (அச்சில்) வடநாட்டுத் திருப்பதிகள் (அச்சில்)