பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் நீப்பவரின் ஆன்மா முக்தியடையும் நிலைகள் விரிவாக ஓவியங்களால் விளக்கப்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் கண்டு களித்த வண்ணம் எம்பெருமானைச் சேவித்துத் திரும்புகின்றோம். பரமபத வாயிலின் வெளிச்சுற்றில் வடபுறத் தில் நரசிங்கமூர்த்தி இரணியனுடன் போரிடும் கோல மும், போரிட்டுக் கொல்லும் கோலமும் ஆக இரண்டு கோர உருவங்கள் உள்ளன. அவை கண்டவர் நெஞ்சம் திடுக்கிடச் செய்யும் தன்மையன. இவற்றில் முற்காலத்தில் போரிடும் மூர்த்தி முதல் தளத்திலுள்ள நரசிம்மன் சந்நிதியிலும், சங்காரமூர்த்தி இராமபிரான் சந்நிதியிலும் வைக்கப்பெற்றிருந்தன என்றும், அவற்றின் பயங்கர உருவங்களைக் கண்டு மக்கள் அஞ்சவே அவை ஈண்டுக் கொணர்ந்து வைக்கப் பெற்றுள்ளன என்றும் அறிகின் றோம். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு திரும்பு கின்றோம். இத் த ல த் து எம்பெருமானைப் பெரியாழ்வார்’ திருமங்கையாழ்வார்', பூதத்தாழ்வார்', பேயாழ்வார்’, திருமழிசைபிரான்’ என்ற ஐந்து ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்துள்ளனர். இறுதியாக உரகமெல்லணையானை வணங்கி விடை பெறுங்கால் திவ்விய கவியின் பாடல் நம் சிந்தையில் எழுகின்றது. 29. பெரியாழ். திரு. 1. 1; 2. 6: 2; 4. 4. 30. பெரி. திரு. 7. 1: 3; 9. 10:30 1: 9 31. இரண். திருவந். 46, 87. 32. மூன். திருவந். 62. 33. நான். திருவந் 34,