பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோட்டியூர் எந்தை 15 'வான்பார்க்கும் பைங்கூழ்போல் வாளா வுனதருளே யான்பார்க்க போர்த்து இரங்கினாய் -தேன்பார்ப்பின் ஒசைத் திருக்கோட்டி ஊரானே இன்னமும்என் ஆசைத் திருக்கோட்டி ஆள்.' jபைங்கூழ்-பசிய பயிர், வாளா.-எப்போதும்; ஆசை திருக்கு - உலகப்பற்றாகிய மாறுபாடு; ஒட்டிபோக்கி; ஆள்-ஆட்கொள்வாய்) என்ற பாசுரத்தை மிடற்றொலி கொண்டு சேவித்து எம்பெரு மானிடம் பிரியாவிடை பெறுகின்றோம். இறுதியாகக் கோயிலின் முன்புறவாயிலினுள் இருக்கும் ஏகாதசிக் கொட்டகையில் வந்து அமர்கின்றோம் அண்மைக் காலத்தில் பக்திச்செல்வர் திரு வயி. கரு. செள மிய மூர்த்தி தொண்டைமான் (இலங்கை நாடாளு மன்ற உறுப்பினர்) என்ற அன்பரால் ரூ. 10000-செலவில் அட்டாங்க விமானம் பழுது பார்த்துப் புதுப்பித்து வண்ணம் தீட்டப்பெற்றதையும், ரூ. 10000 செலவில் கோயில் முழுவதும் மின் விளக்குகள் போடப்பெற்றதையும் அறிந்து மகிழ்கின்றோம். அண்மையிலேயே ஏகாதசிக் கொட்டகையும் திறம்படக் கட்டப்பெற்றுள்ளது. இக் கொட்டகைக்குத் தென்புறம் திருக்கோட்டியூர் நம்பிகட்கும் அவர் மாணவர் இராமாநுசருக்கும் தனித்தனிக் கோயில்கள் இருப்பதையும் காண்கின்றோம். வேறு செய்திகள்: இக்கோயில் ஆட்சியை வழி வழியாகத் தெய்வபக்தியில் சிறந்து விளங்கும் சிவ கங்கை மன்னர்கள் மேற்கொண்டுவருகின்றனர். அவர் களே வழிவழிவரும் அறநிலையப் பாதுகாப்பாளர்கள். மெய்யன்பர்கள் பலரால் ஏற்று நடத்தப்பெறும் திருப்பணி களும், கட்டளைகளும், விழாக்களும் உள்ளன. நாடோறும் 34. நூற். திருப். அந் 42