பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோட்டியூர் எந்தை 17 (அல்வழக்கு-அநியாயங்கள்; அணி-அழகிய கோட்டியர்கோன் -கோட்டியூர் மக்கள் தலைவன்; அபிமானதுங்கன்-அபிமானத்தில் சிறந்தவன்; செல்வன்-செல்வநம்பி.) என்ற திருப்பல்லாண்டுப் பாசுரப்பகுதி இதனை வலி யுறுத்துகின்றது. பெரியாழ்வாரும் செல்வநம்பியும் ஒரு முரீஜயந்தி நாளன்று செளமிய நாராயணமூர்த்தியைச் சேவித்துக் கொண்டிருந்தபொழுது அந்தத் திருமேனி கண்ணன் பிறந்த அவதார காலத்தையே நினைவுறுத்தி முதலாவது ரீஜயந்தியையே கொண்டாடத் தூண்டி விட்டது. அத்திருக்கோயில் நந்தகோபன்மாளிகையாகவும், திருக்கோட்டியூர் கோகுலம் என்ற ஆயர்பாடியாகவும் மாறிவிட்டன. அந்த அநுபவம், 'வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் துவிடக் கண்ணன் முற்றம் கலந்தளறு ஆயிற்றே.' என்ற தொடக்கமான பல பாசுரங்களாகப் பரிணமித்த வரலாற்றை நாம் அறிவோம். இத்திவ்விய தேசத்து வைணவ அடியார்களையும் நினைந்து பெரியாழ்வார் பாடியுள்ளார், பிள்ளைத் தமிழ்’ என்ற பிற்கால இலக்கியத் தின் வித்து முதன்முதலில் இல்வூரிலேயே இடப்பெற்றது என்ற உண்மையையும் அறிகின்றோம். இராமாநுசர் திருமந்திரத்தின் பொருளைத் திருக் கோட்டியூர் நம்பியிடமிருந்து அறிந்தது இந்த ஊரிலேயே என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். மூன்றாவது மந்திரமாகிய சரமசுலோகத்தையும் அதன் உட்பொருளை யும் சின்னாட்கழித்து இராமாநுசருக்கு எடுத்துரைத்தார் 37. பெரியாழ். திரு. 1.1:1 பா.தி-2