பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் நம்பிகள். வைணவர்கட்குக் கண்ணனைய இரண்டு மந்திரங்களையும் உபதேசம் செய்து இராமாநுசருக்கு ஆசாரியார் ஆனார். திருக்கோட்டியூரில்அக்காலத்தில் வாழ்ந்த அடியார்களுள் தலைசிறந்து தொண்டருள் தொண்டராக விளங்கியவர் செல்வநம்பி என்ற பெரியார், உரக மெல்லணையானுக்கு இவர் மிக அணுக்கராயிருந்து அந்தரங்கக் கைங்கரியம் புரிந்து வந்தார் என்று அறிகின்றோம். பலனைக் கருதாது பணிபுரிவது இவருடைய சிறப்பு. திருக்கேர்ட்டியூர் செங்கண்மால் தானே இவரைச் சேவகங் கொன் டாராம். செல்வநம்பியின் வாழ்க்கைத் துணைவியான நங்கையார் கணவனின் கருத்தறிந்து ஒழுகும் கற்புமிக்க உத்தமி. எட்டாம்பத்து பத்தாம் திருவாய்மொழியை ஒதுபவர்கள், "நல்ல பதத்தால் மனைவாழ்பவர் கொண்ட பெண்டிர் மக்களே.' என்று பலனைக் கூறுவர் நம்மாழ்வார். இவ்விடத்தில் ஈட்டில் குறிப்பிடப்பெறும் இதிகாசம் இந்த உத்தமியைப் பற்றியதாகும். திருவனந்தபுரத்திற்குப் பெருந் திரளாகச் சென்று கொண்டிருந்த பாகவதர்கள் வழியில் திருக் கோட்டியூரில் செல்வநம்பியின் இல்லத்தில் சென்று சேர, அப்போது கணவர் வெளியே சென்றிருந்தாராம். விருந் தோம்பலில் தலைசிறந்தவர் நம்பி; அதற்கு உறுதுணை யாக இருந்தவர் நங்கையார். களஞ்சியத்தில் வித்திடக் கட்டி வைத்திருந்த நூறுகோட்டை நெல்லையும் குத்தி அரிசியாக்கி வருந்தியழைத்தாலும் வரமாட்டாத பாகவதர் கள் தாமாகவே வந்தார்கள் என்ற மகிழ்ச்சிப் பெருக்கால் அவர்கட்கு அமுது செய்து படைத்தார். மறுநாள் கணவர் வந்து பார்க்க, விதை நெல் காணாது நங்கையாரை நோக்கி நங்காய், நாளை வித்திட வைத்திருந்த நெற் 38. திருவாய் 8, 10 : 11