பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருமெய்யத்து இன்னமுதம் யூரீவசன பூசணத்தில் ஒரு சூத்திரம் நம் மனத்தில் எழுகின்றது. 'பூகதஜலம் போலே அந்தர் யாமித்வம்; ஆவரண ஜலம் போலே பரத்வம்; பாற்கடல் போலே வ்யூகம், பெருக்காறு போலே விபவம்; அதிலே தேங்கின. மடுக்கள் போலே அச்சாவதாரம்.”* (பூகதம்- பூமிக்குள் இருப்பது; ஆவரணம்-மூடிக் கொண்டிருப்பது; மடுக்கள்-சிறு நீர் நிலைகள்.) என்ற சூத்திரம் எம்பெருமானின் ஐந்து நிலைகளையும் விளக்குவது. இது பரத்துவம், வியூகம், விபவம், அந்தர் யாமித்துவம் என்ற நான்கு நிலைகளின் அருமையையும் அர்ச்சையின் எளிமையையும் எடுத்துக்காட்டுகளால் விளக்குகின்றது. தண்ணிர் வேட்கை உண்டானவனுக்குத் தான் இருக்கின்ற இடத்தில் பூமிக்கு அடியில் நீர் இருந்தா லும் கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அன்றி. பருக நீர் அகப்படாது கண்டு பற்றவேண்டும் என்று ஆசைப்பட்டாருக்கு எம்பெருமான் அவர் மனத்தில் எழுந்தருளியிருந்தாலும், கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்' என்று பராங்குச நாயகி கூறுகின்றபடி நமது கண்களால் காண முடியாதபடி அட்டாங்க யோக முயற்சி வத பூஷ-குத்திரம் 12 புருடோத்தம நாயுடு பதிப்பு) 1. திருவாய் 7, 2 : ே