பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமெய்யத்து இன்னமுதம் 27 காண்டவ வனத்தை அங்கியம் கடவுளுக்கு திருவமுது செய்வித்த எம்பெருமானே மெய்யம் அமர்ந்த பெரு மான் என்பது ஆழ்வாரின் திருவுள்ளம். கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி விட்டானை, மெய்யம் அமர்ந்த பெருமானை' . |கட்டுஏறு-காவல்மிக்குள்ள அமர்ந்த-எழுந்தருளிய, என்பது அவர் திருவாக்கு.) ஆழ்வார் பெருமக்கள் எம் பெருமானைப் பலவகை யாக அநுபவித்து மகிழ்வர் என்றும், அவை அவ இடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல், அவனுடைய திருக்குணங்களில் ஆழங்கால்பட்டு அநுபவித்தல், அவனுடைய திருமேனி அழகினை வருணித்து அநுபவித்தல், அவனுகந்தருளிய திவ்விய தேசங்களின் வளங்களைப் பேசி அநுபவித்தல், அங்கே வாழும் அடியார்களின் பெருமையைக் கூறி அநுபவித் தல் என்று பலவகையாக விரியும் என்பதை நாம் அறி வோம். இவ்வகைகளில் மிகச் சிறந்த வகை ஆழ்வார் தாமான தன்மையைக் களைந்தெறிந்து பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே அநுபவிப்ப தாகும். இங்ங்ணம் அநுபவிக்கும் திறத்தில் தாய் பாசுரம், தோழிபாசுரம், மகள் பாசுரம் என்று மூன்று வகுப்புகள் உண்டு என்பதனையும் அறிவோம். அப்போது ஆழ்வாருக்குப் பரகாலர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் பரகாலநாயகி என்ற பெண்மைப் பெயர் வழங்கப்பெறும் என்பதும் நாம் அறிந்ததே. 10. பெரி திரு-6, 8 1