பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமெய்யத்து இன்னமுதம் 29 ஒரே இறைவனின் வெவ்வேறு வடிவங்களே? என்ற உண்மையினை இப்பாசுரம் உணர்த்துவதனையும் அறிகின்றோம். தாய்பாசுரமாகச் செல்லும் திருக்கண்ணபுரத்து மங்களாசாசனப் பதிகத்தில் ஒரு பாசுரம் இந்தத் 'திருமெய்யத்து இன்னமுதத்தை க் குறிப்பிடுகின்றது. அருவிசோர் வேங்கடம் நீர்மலை' என்றுவாய் வெருவினாள், மெய்யம் வினவி யிருக்கின்றாள்.' (சோர்-சொரிகின்ற; வெருவினாள்-பிதற்றினாள்) பேரகால நாயகியை நோக்கி நான் ஏதேனும் சொன்னால் அதனை அவள் செவி ஏற்பதில்லை; அதற்கு அவள் யாதொரு மறுமொழி கூறுவதும் இல்லை. திருவேங்கடம், திருநீர்மலை என்று சதா வாய் வெருவிக் கொண்டு நிற்கின்றாள். சில சமயங்களில் திரு மெய்யம் என்ற திவ்விய தேசம் ஒன்று இருக்கின்றதே. அதற்கு மெய்யம் என்ற பெயர் வந்ததற்குக் காரனம் என்ன? அடியவர்க்கு மெய்யாகவே நின்று செயல் புரிந்த இடம் என்ற காரணத்திற்காகவா?’ என்று அருகிலுள்ள வர்களை விளைவுகின்றாள் என்பதாகத் திருத்தாயார் பேசுகின்றார். மகள் பாசுரமாகச் செல்லும் திருநாகை செளந்தரிய ராசன் மீதுள்ள பதிகத்தின் பாசுரம் ஒன்றில் திருமெய்யத்து எம்பெருமான் குறிப்பிடப் பெறுகின்றான். தலைவனது உருவெளிப் பாட்டில் நலியும் மகள் இவ்வாறு பேசுகின்றாள்: 12. பெரி. திருமடல்-கண்ணி.125-126 13. பெரி. திரு 8. 2 : 3