பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமெய்யத்து இன்னமுதம் 3 i அடுத்து, எம்பெருமான் சந்நிதிக்கு மேற்குப்புற மாகவுள்ள பாறையில் குடைந்தெடுக்கப்பெற்ற குடை வரையைக் காண விரைகின்றோம். அங்கே எம்பெருமான் போக சயன மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவர்தம் அனந்தசயனத் திருக்கோலம் கருவறை உட்பட மலையைக் குடைந்து அமைத்ததாகும். இவரையும் திருமங்கை யாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளதாகத் தோன்று கின்றது. கடல்மல்லைத் தலசயனத்து எம்பெருமானை மங்களசாசானம் வசய்யும் பொழுது இந்த எம்பெருமான் ஆழ்வார் திருவுள்ளத்திற்கு அநுபவமாகின்றார். 'பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித் தானைப் பிறை எயிற்றன் அடலரியாய்ப் பெருகி னானை தண்ணார்ந்த வார்புனல்சூழ் மெய்ய மென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள் மேவி, எண்ணானை எண்ணிறந்த புகழி னானை இலங்கொளிசேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை, கண்ணாரக் கண்டு கொண்டேன் கடிபொழில்சூழ் கடல்ம்ல்லைத் தலசயனத்தே'. (பெண்-மோகினி அவதாரம்; பிறை சந்திரன்; எயிறுபல; அடல்-வண்மை; அரி-சிங்கம்; புனல்-நீர், தடவரை. பெரிய மலை; பணங்கள். படங்கள்; மேவி-பொருந்தி, எண் னானை-யோகியர்களால் சிந்திக்கப் பெறுபவன்; அரவிந்தம்-தாமரை) என்ற பாடலை மிடற்றொலியுடன் உளங்கரைந்து ஒதி எம்பெருமானைச் சேவிக்கின்றோம். மோகினி அவதாரம் எடுத்து அமுதத்தைத் தேவர்கட்கு வழங்கியவன்; நரசிம்மாவதாரம் எடுத்துப் பிரகலாதனை உய்வித்த வன். திருமெய்யத்தில் சயனத் திருக்கோலம் கொண் டிருப்டிவன். உறங்குவான் போல் உலகப் படைப்பினைச் 15, பெரி. திரு 2. 5; 8