பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

한 2 பாண்டிநாட்டுத் திருப்பதிகள் சிந்தித்துக் கொண்டிருப்பவன், குணாதுசந்தானம் பண் ணும் அடியார்கள் மனத்தில் தோன்று பவன்: ஆகிய எம்பெருமானைத் திருக்கடல்மல்லையில் சேவிக்கப் பெற்ற தாக இனியராகின்றார் ஆழ்வார். நாமும் அதே நிலையைற பெற முயல்கின்றோம். இத்தலத்தில் அரவு அணையானாக இருக்கும் அனந்தன் பெருமானுக்குக் குடைபிடிக்கின்றான். திரு அரங்கத்து எம்பெருமானைப் போலவே இத்தலத்து எம்பெருமானும் இரண்டு திருக்கையனாகவே காட்சி அளிக் கின்றான், ஒரு கை அனந்தனுக்கு அருளுவது போல் உயர்ந்து காணப்பெறுகின்றது. மற்றொரு கை திருமார்பில் * அகலகில்லேன் இறையும்’ என்றிருக்கும் பெரிய பிராட்டி யாரைப் பாதுகாக்கும் நிலையில் காணப்பெறுகின்றது. சயனத் திருக்கோல எம்பெருமானைச் சுற்றிக் கருடன் சித்திரகுப்தன். மார்க்கண்டேயர், நான்முகன் இவர்கள் உள்ளனர். வானவீதியில் தேவர்கள் கின்னரர் கிம்புருடர் விரைந்து செல்லும் காட்சி வேறு தலங்களில் காணக் கிடைக்காத கண் கொள்ளாக்காட்சி. பெருமானின் காலடி யில் மதுகைடவர் என்ற அசுரர்களும் பூமிப்பிராட்டியும் காணப்பெறுகின்றனர். முன்னொருகால் பூமிப்பிராட்டி யாரை மதுகைடவர் தூக்கிச் சென்றபொழுது ஆதிசேடன் அவர்கள்மீது நஞ்சினை உமிழ்ந்து அவர்களை எரித்தி குக் கின்றான். பரந்தாமனின் ஆணையின்றி அனந்தன் நஞ்சு உமிழ்ந்ததற்கு வருந்தியிருக்கின்றான். அதனால் அவனைச் சாந்தி செய்யும் திருக்கோலத்தில் இந்த அனந்த சயனர் கிடக்கின்றார் என்பது புராண வரலாறு. இங்குள்ள எம். பெருமானும் மல்லைத்தலசயனரும் ஒரே கோலத்தவ ராகக் காணப்பெறுகின்றனர். திருமெய்யத்துக் குடைவரை யும் மாமல்லத்துத் திருக்கோயிலும் பல்லவர் பணியன்றோ? திருமங்கையார் திருவுள்ளத்திலும் இவர்கள் இருவரும் சேர்ந்தே அநுபவமாகி இருப்பவர்கள். இங்கு தீர்த்தம், திருத்துழாய் முதலியன பெற்று வெளி வருகின்றோம். இந்