பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமெய்யத்து இன்னமுதம் 33 நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது. ஆளாய் உனக்கன்பாய் ஆசையாய் நாணிலியா வாளா மனைவியென்று வாழ்வேனைக்-கேளாய் திருமெய்ய மாயா! சிலைகால் வளைத்து வரும்எய்ய மாயா மதன்.'" (ஆள் ஆய்-அடிமைப்பட்டு; ஆசையாய் - ஆசைக் கொண்டு; வாளா.-iணாக; கேளாய்-கவனிப்பால்; சிலை - வில்; வரும்-வருவான்; மதன்-மன்மதன் என்ற பாசுரத்தை ஓதி உளங் கரைகின்றோம். பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுவதாக அமைந்த இப் பாடல் சீவான்மா பரமான்மாவை நோக்கித் தன் இடைய ஆரா அன்பைப் புலப்படுத்துகின்றது. நாமும் திவ்வியகவி பெற்ற அநுபவத்தையே பெற முயல் கின்றோம். அடுத்து, ஒரு சிறு தெருவினைக் கடந்து சிவபெரு மான் திருக்கோயிலுக்கு வருகின்றோம். இத்திருக்கோயி லையும் ஒர் இராஜகோபுரம் அழகு செய்கின்றது. கீழைக் கோயில் என்று ஊர் மக்களால் வழங்கப்பெறும் இத் திருக்கோயிலின் எம்பெருமான் சத்தியகிரீஸ்வரர் என்ப வர். இவரையும் வணங்குகின்றோம். இத்திருக்கோயிலும் குடைவரையே. குடைவரையின்மேல் கோடியில் இலிங்கம் உள்ளது. இம் மூர்த்தியும் மலையைக் குடைந்து நிர்மாணிக்கப் பெற்றவரே. மகேந்திரப் பல்லவ மன்னன் சமயவேறுபாடு கருதாமல் மலையைக் குடைந்து இரண்டு திருக்கோயில்களையும் அமைத்த சமரச நோக்கினை எண்ணி வியக்கின்றோம். ஆயினும், இத்திருக்கோயில் எம்பெருமான் தேவாரப் பாடிய மூவராலும் பாடல் பெற வில்லை. இதிலிருந்து அவர்கட்குப் பின்னர் எழுந்த கோயி லாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகம்செய்கின்றோம். 15. நூற். திருப் அந்-48 பா. தி.-3