பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் சிவன் கோயிலில் குடுமியான் மலையில் உள்ளது போன்ற இசைக்கலைபற்றிய ஒரு கல்வெட்டு உள்ளது. பெருமாள் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றின் மூலம் அத் திருக்கோயிலைச் சாத்தான் மாறன் என்பான் புதுப் பித்தான் என்பதை அறிகின்றோம். அவனுடைய அன்னையாரான பெருந்தேவி எம்பெருமானுக்கு நில மானியங்கள் அளித்த செய்தியையும் அறிகின்றோம். இச்சாத்தன் மாறன் இரண்டாம் நந்திவர்மன் காலத் தவன். இவனுக்குப் பிறகு விசயாலய சோழன் வழி வந்த மன்னர்களே இப்பகுதியை ஆண்டவர்கள். ஹொய்சாள மன்னர்களின் தளகர்த்தனான அப்பண்ண தண்டநாயகன் இராமேசுவரம் சென்று திரும்பிய பொழுது இத்திருத்தலத் திற்கு வந்த செய்தியும் இங்கு நமக்குக் கிடைக்கின்றது. அவன் வந்த சமயம் இந்தத் தலத்து இரண்டு திருக் கோயில்களின் அறக்கட்டளை ஆளர்களிடையே இருந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்த செய்தியையும் அறிகின் றோம். இவனே இரண்டு திருக்கோயில்கட்கும் இடையே நிரந்தரமாக ஒரு பெரிய சுவர் எழுப்பியவன். இதை ஒரு கல்வெட்டிலும் பொறித்து வைத்துள்ளான் அப்பெருமகன். இக் கல்வெட்டு கி. பி. 1245இல் ஏற்பட்டதாகத் தெரி கின்றது. பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் இப் பகுதி இராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் இருந்த தாகவும், அவர்களுள் விசய ரகுநாத சேதுபதி என்பவர் காலத்தில் இப்பகுதியைப் புதுக்கோட்டைத்தொண்டைமான் களிடம் ஒப்படைத்ததாகவும் அறிகின்றோம். மராட்டியர் ஆட்சியில் தஞ்சையிலிருந்து ஆனந்த ராவ் புதுக்கோட்டையின் மீது தண்டு எடுத்து வந்தபோது புதுக்கோட்டையை ஆண்ட விசயரகுநாதத் தொண்டைமான் திருமெய்யம் கோட்டையினுள் ஒளிந்து கொண்டிருந்த செய்தியையும் அறிகின்றோம். பாஞ்சாலங் குறிச்சி வீரர்