பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருப்புல்லாணி எம்பெருமான் உயிர்கள் எம்பெருமானை அடைவதற்குப் புருஷ காரமாக இருப்பவள் பெரிய பிராட்டியார் என்பது வைணவ தத்துவம். கடின சித்தமுடைய கணவனை யும் குறும்பு நிறைந்த மக்களையும் பெற்ற ஓர் இல்லத் தலைவி எங்ங்னம் அவர்களை விட்டுத் தாய் வீடு செல்ல மாட்டாளோ, அங்ங்னமே குற்றத்திற்கேற்ற தண்டனை களை அளிப்பதில் ஊன்றி நிற்கும் கணவனையும் குற்றங். களையே செய்து கொண்டு போகும் மக்களையும் பெற்ற பிராட்டியாரும் எம்பெருமானை விட்டுப் பிரியாள். ஆகவே, பெரிய பிராட்டியாருடன் கூடியிருக்கும் எம்பெருமானே தஞ்சம் என்ற கொள்கையில் ஊற்றம் உடையவர்கள் வைணவர்கள். நம்மாழ்வாரின் சரணாகதித் தத்துவம் இதனையே எடுத்தியம்புகின்றது.

  • அகல கில்லேன் இறையும்’ என்று

அலர்மேல் மங்கை உறைமார்பா! கிகரில் புகழாய் உலகம் மூன்(று) உடையாய் என்னை ஆள்வானே! கிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல்ஒன் (று) இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.” இறை-சிறிதுநேரம், கணம்; புகல்-பற்றுக்கோடு} என்ற பாசுரம் இத்தத்துவத்தைக் குறிப்பிடும் உயிர்நிலை #ff6び7 L#市ぐ5好「LD。 1. புருஷகாரம்-தகவுரை கூறுபவள். 2. திருவாய் 6-10:10,