பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புல்லாணி எம்பெருமான் 41 (பொருது-அலை எறிந்து; முந்நீர்-கடல்; மணிஇரத்தினம்) என்று கூறுவதைக் காண்க. இதற்குப் பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த உரை:உத்தேச்யஸித் திற்கு இருந்த விடம் விட்டுப்போக வேண்டாத தேசம், பொருள் வயிற் பிரிகிறேன்? என்று அவனுக்குக் கண்ணழிவு சொல்லவொண்ணாத தேசம்' என்பது. இதனை விவரிப்போம். பிரிந்து செல்லும் தலைவன் நல்வாழ்க்கைக்கு நல் உ று ப் பா. க உள்ள அரும் பெரும் பொருள்களைத் திரட்டிக் கொணர்வதற்காகத் தொலைநாடு செல்ல அவசியமில்லாதபடி திருப்புல் லாணியில் மனைவாயிலிலே மணியும் முத்தும் மலிந்து கிடக்கின்றனவாதலின், அங்குச் சென்று கூடினோமா யின் பொருள்வயிற் பிரிவும் நேரமாட்டாது என்பது குறிப்பு. மேலும் ஆழ்வார், பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லானி' என்றும், புணரியோதம் பணி லம் மணியுந்து புல்லாணி' என்றும், புரவி என்னப் புதம் செய்து வந்துந்து புல்லாணி’ என்றும் இங்குள்ள கடலை வருணித்திருப்பதைக் கண்டு மகிழலாம் இந்த ஊர்க் கடற்கரைக்கு பொன்னங்கழிக்கானல்’ என்று திரு நாமம் இட்டு மகிழ்கின்றார் திருமங்கையாழ்வார். வான மாமலையில் சேற்றுத்தாமரை* என்ற திருநாமத்துடன் திடாகமும், தேனமாமபொழில்' என்ற திருநாமத் துடன் தோப்பும், திருமோகூரில் தாளதாமரை' என்ற திருநாமத்துடன் தடாகமும் நம்மாழ்வார் திருவாக்கில் வந்துள்ளமை ஈண்டு நினைந்து மகிழ்வதற்குரியவை 11. பெரி.திரு. 9.3 : 4. பொங்கு-அலைமோதும். 12. 4ை9.3 : 5. புணரி-கடல், ஒதம்-அலை. 13. டிை 9.3 பணிலம்-சங்கு. புரவி-குதிரை புதம் செய்தல்-தாவிப் பாய்தல் 14. திருவாய் 5.1 : 1 16. திருவாய் 10.1 : 1. 16. ഒു. 5.7 : 8