பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புல்லாணி எம்பெருமான் 43 (கள்-மது; அவிழும்-ஒழுகும்; காவி.செங்கழுநீர்ப்பூ: து மடல்-வெளுத்தமடல், கைதை-தாழை; அள்ளல்-சேறு: பழனம்-வயல்.) என்று அந்தத் திவ்விய தேசத்தின் சூழலை நெய்தல் நிலக் கருப்பொருள்களைக் கொண்டே வருணித்திருக் கும் எழில்நலம் நம் உள்ளத்தைக் கொள்ள்ை கொள்ளு கின்றது. ஆயின் இன்று அச்சூழ்நிலையை நாம் கான முடிகின்றதில்லை. இந்தச் சூழலில் அமைந்த புல்லாணி என்ற ஊர் இன்று விரிச்சோடிக் கிடக்கின்றது. மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. நாள்தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைவே. திருமங்கையாழ்வாரும் ஒரே ஒரு பாசுரத்தில், 'புனையார் மணிமாடப் புல்லாணி”* (புனை ஆர்-அழகுமிக்க) என்று மட்டிலுமே குறிப்பிடுகின்றார். ஆகவே, அவர் காலத்திலும் இந்த ஊர் இன்றுள்ளதுபோல் விரிச்சோடிக் கிடந்ததோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது, இந்தச் சூழ்நிலையில்தான் பரகால நாயகி எம்பெரு மான் மீது காதல் கொண்டு பொன்நிறம் பெற்றதாகக் கூறுகின்றாள். 'முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்’’’ (மன்னன்-தேவாதிதேவன்; மாலாகி-காதல் உற்று.) என்பதனால் இதனை அறியலாம். அலம்புரிந்த நெடுந் தடக்கையைக்கொண்டு" தானம் பெற்று மூவுலகளந்: 24. பெரி.திரு. 9.4 : 7 2. 649.4 : 2 26. திருநெடுந்-6