பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் தான் எம்பெருமான். தன்னிடம் உண்மை அன்பு இல் லாத இந்திரனுக்காக இவ்வளவு செய்தவன் உண்மை அன்புள்ள தனக்கு அப்படிபட்ட செயலை மேற்கொள்ளா விடினும் முகத்தையும் காட்டாது மேனி பசலைபடரும்படி செய்துவிட்டானே என்று துயரப்படுகின்றாள் ஆழ்வார் நாயகி. இதனையே இன்னொரு பாசுரத்தில், 'பொன்னை கைவிக்கும் அப்பூஞ் செருந்தி மன கீழல்வாய் என்னை கைவித்து எழில்கொண்டு) அகன்ற பெருமான்.' (பொன்-பொன் உருவம்; நைவிக்கும்-தோற்கடிக்க வல்ல; செருந்தி-சுரபுன்னை; நீழல்வாய்-நிழலில்; நைவித்துஈடுபடுத்தி, எழில்-அழகு; அகன்ற-பிரிந்து சென்ற.j என்று குறிப்பிடுவதைக் கண்டு மகிழலாம். இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளியுள்ள நிறமும் மண மும் நிழலும் இவையெல்லாம் உண்டாயிருக்கிறபடி. ஒரிந்திரியம் கொண்டு ஒதுங்க நிழலில்லை கிடீர்: ஸர்வேந்த்ரியாபஹாரகூடிமமான தேசம். சகூடி*ந்திரியத் துக்கு நிறம்; க்ராந்திரியத்துக்கு மனம்; ஸ்பர்சேந்திரி யத்துக்கு நிழல்' என்ற இன்சுவை மிக்க வியாக்கியா னம் பன்முறை படித்து அநுபவிக்கத் தக்கது. இரணி யனின் ஆகத்தைப் பிளந்து சிறுக்கனான பிரகலாத னுக்கு அருள் புரிந்த செயலும் உண்ணாது உறங் காது ஒலிகடலை ஊடறுத்து ஒரு பிராட்டிக்காக இலங்கையை நீறு எழச் செய்த செயலும், திருப்பாற் கடலில் பாம்பனையைக் கைவிட்டு வடமதுரையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து குவலயாபீடம் என்ற யானையைக் கொன்றொழித்த வீரச்செயலும்" ஆழ்வார் நாயகியின் உள்ளத்தைக் கவர்ந்து அப்பெருமானிடம் மால்கொள்ளச் செய்கின்றது. 2?. பெரி.திரு. 9.3 : 1. 29. பெரி.திரு. 9.4 : 5 28. ഒു 9.4 : 4 30. ഒു.-9.4 : S