பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} பாண்டி நாட்டுத் திருப்பதிகள் இந்நிலையில் திவ்விய கவியின் பாசுரம் நினைவிற்கு வருகின்றது. 'மதயானைக் கோள்விடுத்து மாமுதலை கொன்ற கதையால் இதயம் கரையும் - முதலாய புல்லாணி மாலே! புறத்தோர் புகழ் இருப்பு வல்லாணி என்செவிக்கு மாறு.' (மதயானை-கசேந்திரன்; கோள்-துன்பம்; விடுக் துபோக்கி; கதை-வரலாறு; முதல் ஆய-முழுதற்கடவுளாகிய, புறத்தோர்-பரமதேவதைகள்; இரும்பு-இரும்பாலாகிய,மாறு விரோதமான .) என்ற பாசுரத்தையும் ஓதி உளங்கரைகின்றோம். இத் திருத்தலத்தில் புல்லர் முதலான முனியுங் கவர்கள் ஜகந்நாதனைச் சரண் அடைந்து பரமபதம் பெற்றதாகப் புராண வரலாறு கூறுகின்றது. கடற் கடவுளும் சக்கரவர்த்தித் திருமகனை சரண் அடைந்து அவனது கருணைக்குப் பாத்திரனானதும் இத் திருத்தலத் தில்தான். ஆதலால் இத் திவ்விய தேசத்தில் சரணா கதி தத்துவத்தை அதுட்டிக்கின்றவர்கள் இம்மை மறு மைப் பயன்கள் எல்லாவற்றையும் எளிதில் பெறுவர் என்பது நம்பிக்கை. இத்தலத்து எம்பெருமான் இராமபிரானுக்கு வில் ஒன்றை அளித்தான் என்பது புராண வரலாறு. அது காரணமாக இந்த எம்பெருமானுக்குத் தெய்வச் சிலை யார், தி வ்விய சரபன் என்ற பெயர்கள் நிலைத்துவிட்டன என்பதையும் அறிகின்றோம். திருக்கோயிலில் செப்புப் படிமங்கள் பல பூசையின்றிக் கிடக்கின்றன. இராமர், 48. நூற். திருப். அந் 44