பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புல்லாணி எம்பெருமான் 51 இலக்குவர், பரதர், சத்துருக்கனர் இவர்கள் படிமங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. இத் திருத்தலத்தில் புல்லர், கண்ணுவர், காலவர் முதலிய முனியுங்கவர்கள் முத்தி அடைந்துள்ளனர். புல்லர் விரும்பியபடியே ஜகந்நாதன் தேவியர் மூவரோடும், நான்கு புயங்க ளோடும், பஞ்சாயுதங்களோடும், ரீவத்சம், கேளத் துபம் விளங்க, பீதக ஆடை திகழ, திவ்விய ஆபரணங் களுடன் எழுந்தருளியிருப்பதாக வரலாறு கூறுகின்றது. இத் தலத்தில் ஹேமதீர்த்தம், சக்கர தீர்த்தம் புகழ் பெற்றவை; எல்லாப் பாவங்களையும் போக்கவல்லவை. இத்திருத்தலத்தில் தேவலர் என்னும் முனியுங்கவர் தவம் செய்யும்பொழுது சப்த கன்னியரும் அங்குள்ள திருக் குளத்தில் நீராடி அவரது தவத்தைக் குலைத்ததாகவும், முனிவர் சினமுற்று அவர்களை யட்சர்களாகச் சபித்த தாகவும் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது. அவர்கள் முனிவரைச் சாபவிமோசனம் கோரியபொழுது அவரும் புல்லணையில் புல்லர் வழிபட்ட புல்லாணி எம்பெரு மானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றுய்யுமாறு அருளியதையும் அறிகின்றோம்". அசுவத்த விருட்சம்' என்னும் அரசமரமே இத்தல விருட்சமாக வழங்கி வருகின்றது. இதற்கும் ஒரு புராண வரலாறு உண்டு. ஆதியில் பரந்தாமன் தன் னிடமிருந்த படைப்புத்தொழிலைத் தான் படைத்த நான் முகனிடம் ஒப்படைத்தார் என்றும், படைத்தல் பொறுப் பை மேற்கொண்ட நான்முகன் தெற்கு நோக்கி வந்த பொழுது கோடிக்கதிரவர்களின் ஒரு பேரொளி தோன்றி மறைந்ததென்றும், அதன் இரகசியம் என்னவென்று நான்முகன பரந்தாமனை, வினவ, அவனும் அதுவே போதிமரம் என்றும், அதன் அடியில்தான் ஜகந்நாதன். தங்குகின்றான் என்றும் கூறியதாக வரலாறு. அது 49. போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரையும் விஷ்ணுவின் அவதாரமாகக் கொண்டது இதுவே காரணம் போலும்.