பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் காரணமான போதி என்னும் அரசமரம் ஜகந்நாதனுக்கு நிழல்தரும் தருவாக அமைந்துள்ளது என்பதனையும் அறிகின றோம். இத் திருத்தலத்தில் இரவில் எம்பெருமானுக்குப் படைக்கப் பெறும் திருக்கண்ணமுது (திருக்கன்னல் அமுது:) அதாவது பால் பாயசம் மிக்க சுவையுடையது. பகலில் எம்பெருமானைச் சேவிக்க வரும் அடியார்கள் நினைவாக அர்ச்சகரைக் கேட்டால் அவரும் இதற்காகவே எடுத்து வைத்திருக்கும் திருக்கண்ண முதினைத் தருவார்; சுவைத்து மகிழலாம். இங்குள்ள ஆதிசேகவின் காவலரே இராமநாதபுரம் மன்னர்கள். சேதுக்கரையையும் சேர்ந்த பகுதியின் ம ை ை களர்களாக இருப்பதால் அவர்களைச் சேது .இன் என வழங்கினர். திருப்புல்லாணித் திருக்கோயில் தோன்றிய காலம் உறுதியாகத் தெரியவில்லை. பரராஜ சேகர ராஜா காலத்தில் அது கட்டப் பெற்றதாக வரலாற்றால் அறிகின்றோம். சேதுபதிகள் இக் கோயில் காரியங்கள் நடைபெற இருபத்தேழு கிராமங்களை வழங்கியுள்ளனர். அதற்குத் தாமிர சாசனங்களும் ஒலைச் சாசனங்களும் உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேதுபதியாக இருந்த கிழவன் சேதுபதி என்னும் இது குகாத சேதுபதி அவர்கள் பதினொரு கிராமங்களைத் தானமாக அளித்த செய் தியை அறிகின்றோம். இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த விஜயரகுநாத சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி முதலியவர்களும் பல நிபந்தங்களை ஏற்படுத்தியுள்ளனர். திருக்கோயிலுக்குச் சொந்தமாகப் பல உப்பளங்கள் உள்ளன. மன்னார் வளைகுடாவில் நடைபெறும் முத்துக் குளிப்பிலும் இத் திருக்கோயிலுக்கு ஒரு பங்கிருப்பதாக அறியக் கிடக்கினறது. இத்தகைய செய்திகளை அறிந்த வண்ணம் மனநிறைவுடன் தேவிபட்டணம, நவபாஷாணம் முதலிய இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத் துடன் இராமநாதபுரம் திரும்புகின்றோம்.