பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூடலழகர் 5岳 பாமாலை கிடைத்தது. இந்தப் பாமாலை பிறந்த இடம் தான் திருக்கூடல்' என வழங்கும் தென் மதுரையாகும். அந்தத் திவ்விய தேசத்துக்கு இன்று புறப்பட வேண்டும் என்பது நமது திட்டம். இருப்பூர்தி நிலையத்திற்கு எதிரிலுள்ள நாம் தங்கி யிருக்கும் மங்கம்மாள் சத்திரத்தில் அதிகாலையில் எழுந்து நீராடுகின்றோம். துய ஆடை அணிந்து திருக்கோயிலுக்குப் போகச் சித்தமாகின்றோம். இந்தத் திருக்கோயில் சத்திரத்திற்கு அருகிலுள்ளது. சத்திரத் திலிருந்து தெற்கு நோக்கி நடந்தால் சுமார் 100 கெஜ துரத்தில் உள்ளது கட்டபொம்மன் சிலை. மதுரைப் பேருந்து நிலையத்திற்கு வெளியில் நாற்சந்தியிலுள்ள இந்தச் சிலையைக் கடந்து தெற்குநோக்கி நடந்து டி. வி. எஸ். தொழிற்சாலையை அடைகின்றோம். அதற்கு நேராகக் கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை வழியாக மேலும் 100 கெஜ தூரம் நடந்து உயர்ந்த மதில் களால் சூழப்பெற்றுள்ள திருக்கோயிலை அடைகின் றோம். இராஜகோபுரத்தைக் கடந்து முதல் பிராகாரத்தை அடைகின்றோம். பிராகாரத்தின் தென்புறத்தில் தனி வளைவில் தாயார் சந்நிதியும் அதன் வடபுறத்தில் தனி வளைவில் ஆண்டாள் சந்நிதியும் உள்ளன. கூடலழகர் சந்நிதி மூன்று தளங்களில் அமைந்துள்ளது. தரைத்தளத்தில் (Ground Floor) மூலவர் ஆகூய வர தன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் சேவை சாதிக்கின் றார். இவரையே சிலப்பதிகார அரும்பத உரையாசிரி யர் இருந்தவளமுடையார் என்று குறிப்பிடுவார். உற்ச வர் வியூக செளந்தரராஜன் என்ற திருநாமம் கொண்ட வர். அடுத்து முதல் தளத்திலுள்ள (First Flooா மூல வராகிய எம்பெருமான் சயன்த் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவரையே சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் அந்தரவானத்து எம்பெரு மான்’ என்று குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இவர்,